ஸைட்: பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி விபரீதத்துடன் விளையாடுகிறார்

 

zeti11எம்டிபியின் நிதியிலிருந்து யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று வால் ஸ்திரிட் ஜெர்னல் அம்பலப்படுத்தியுள்ள விவகாரத்தில் பேங்க் நெகாராவின் கவர்னர் ஸெட்டி அக்தார் அஸிஸ் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை அவர் செய்ய வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறினார்.

அவர் கவனமுடன் நடந்துகொள்ளவில்லை என்றால், நிதி விவகாரத்தில் நாட்டின் நற்பெயர் கடுமையாக பாதிக்கபடுவதுடன் நிலைமை மோசமாகி விபரீதமாகிவிடும் என்று ஸைட் இப்ராகிம் எச்சரித்தார்.