மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியா குடிநுழைவுத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போலீஸ் கமாண்டோ சிருல் அஸ்ஹார் ஒமார் தான் அல்தான்துயாவை கொலை செய்தது பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் உத்தரவுப்படிதான் என்று ஒப்புக்கொள்ளப் போவதாக சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் செய்தி மோசடியானது என்று உத்துசான் ஓன்லைன் கூறுகிறது.
சிருலின் வழக்குரைஞர் ஹஸ்னால் ரெஸுவா மெரிக்கான் அச்செய்தியை ஒரு வதந்தி என்று நிராகரித்தார்.
சிருலுடன் நேரடியாகப் பேசியதாகவும், சிருலுல் அத்தகவலை வன்மையாக மறுத்ததுடன், அவர் நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்ளப் போவதாக கூறப்படுவதையும் மறுத்தார் என்று ஹஸ்னால் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த வதந்தி நேற்றிரவிலிருந்து சமூக வலைதளத்தில், குறிப்பாக வாட்ஸ்அப்பிலிருந்து, வலம் வந்து கொண்டிருக்கிறது.


























வதந்திகள் “உண்மையாவது” மலேசியாவில் சகஜமாயிற்றே.
உத்துசானில் எது வந்தாலும் அது வதந்தி தான்! ஆனால் இது உண்மையாக இருக்குமோ?
கொலை குற்றம் சாட்டப்பட்டவன் ,,, எப்படி ஐயா ஆஸ்திரேலியா போனான்,,,புதிராக உள்ளதே ,,,,
கொலை குற்றத்தில் மரண தண்டனை பெற்றவன் எப்படி ஆஸ்திரேலியா போனான்????????????? புதிராக உள்ளதே ????????
நடந்தே போயிருப்பானோ?