லவ் யாட் பிளாசாவில் கைபேசியைத் திருடிய இளைஞனுக்கு உடந்தையாக இருந்தவனைப் போலீஸ் பொறுப்பு-அதிகாரி விடுவித்தார் என்பதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் ஒப்புக்கொண்டார்.
மேலதிகாரிகளிடம் ஆலோசனை கலக்காமல் அவ் வதிகாரி அந்த இளைஞனை விடுவித்து விட்டார் என காலிட் கூறினார்.
அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உடந்தையாக இருந்தவனை விடுவிப்பது குற்றமா என வினவியதற்கு, “ஒரு வகையில் குற்றமே”, என்றார்.
அவர் மேலதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும் என்றாரவர்.
விடுவிகக்ப்பட்ட இளைஞன் தன் நண்பனை லவ் யாட் மாலில் உள்ள ஒரு கடைக்காரர் ஏமாற்றி விட்டார் எனப் பொய்யான தகவலைப் பரப்பத் தொடங்கினான் என காலிட் கூறினார்.
அதன் விளைவாக அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் கடைக்காரர்களுக்குமிடையே கைகலப்பு மூண்டது. அதன் காரணமாக நேற்றிரவு மீண்டும் ஒரு சச்சரவு மூண்டது.
பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடவடிக்கை என்று!!!!
அட குற்றவாளியையே கூட வைத்துக் கொண்டு சல்லாபம் பண்ணும் காவல்துறையினரை நீங்கள் பார்த்ததில்லையா!. இதெல்லாம் ஜுஜுபி.
இந்தக் குற்றத்திற்காக ஒரு வாரம் ஆஸ்திரேலியாவை சுற்றிப் பார்க்க அவரை அனுப்பி வையுங்கள்!
கைப்பேசியை திருடி அந்த இனத்துக்கு தீராத களங்கத்தை ஏற்ப்படுத்தி. விட்டான்.
திருடியதை அவர்கள் இனி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! திருட்டைக் கூட அரசியல்/இனப் பிரச்சனையாக்குவதில் கை தேர்ந்தவர்கள் அவர்கள்!
விடுவித்ததற்கு காரணம், அதில் ஒருவனின் அப்பா போலிசாம்…
சார்டின் திருடியவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை ,,,, கைபேசியை திருடியவனுக்கு ,,,,, எத்தனை ஆண்டுகள் ,,,, அவனுக்கு துணை புரிந்தவனுக்கு ,,,,, மன்னிப்பு ,,,,, மன்னிப்பு வழங்கிய காவலருக்கு ,,,, தண்டனை ,,, பதவி உயர்வு ,,,,போங்கடா நீங்களும் ,,,,,உங்கள் நடவடையும் ,,,, நடுவில் ஓட்டைதான்,,,
மக்களின் திசையை திருப்பிவிட்டான்… எல்லோரும் லோ யாத்ட் பற்றி தான் பேசுகிறார்கள்… எல்லாம் அரசியல்…
நம் மாபெரும் தலைவர்கள் இதை கண்டும் காணமல் இருகிறார்கள்… அவர்களுக்கு நாட்காலிமேல் கண்… நம் சமுதாயம் குட்டிசோருதான்… இது வுறுதி… நிச்சயம்…
சாடின் அரிசி திருடியவனுக்கு பத்து ஆண்டு சிறை . ஆடம்பர கைத்தொலை பேசியை கொள்ளையடித்தவன் ஜாமிநில் விடுவிப்பு . நம்ம தலைவர்கள் பதவிக்கு சண்டை