லவ் யாட் கடைக்காரர் ஏமாற்றினார் என்பதற்கு ஆதாரமில்லை

polisலவ்  யாட்  பிளாசாவில்  கைபேசி  திருடியதற்காகக்  கைது  செய்யப்பட்ட  ஆடவனைக்  கடைக்காரர்  ஏமாற்றினார்  என்பதற்கு  எந்த  ஆதாரமுமில்லை  என்பதைப் போலீஸ்  மீண்டும்  வலியுறுத்தியுள்ளது.

“எங்கள்  விசாரணையில் அப்படி  நடந்ததாகத்  தெரியவில்லை. அதற்கான  ஆதாரம்  கிடைத்தால்  அதையும்  ஆராய்வோம்.

“இப்போதைக்கு  இது  ஒரு  திருட்டு  வழக்குத்தான்”, என  கோலாலும்பூர்  போலீஸ்  தலைவர்  தாஜுடின்  முகம்மட்  இசா  கூறினார்.

பிடிப்பட்ட  ஆடவன்  தன்னைக்  கடைகாரர்  ஏமாற்றினார்  எனப்  போலீசில்  புகார்  செய்துள்ளார்  என்று  கூறப்படுவதையும்  அவர்  மறுத்தார்.