மீண்டும் நடக்கக்கூடாது: ஐஜிபி-க்கு பிரதமர் உத்தரவு

najibநேற்று  லவ்  யாட்  பிளாசாவில்  நிகழ்ந்ததைப்  போன்ற  வன்செயல்கள்  மீண்டும்  நடக்காமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காருக்கு  உத்தரவிட்டுள்ளார்.

அச்சம்பவத்தை  ஒரு  குற்ற  விவகாரமாகத்தான்  பார்க்க  வேண்டுமே  தவிர  இன  விவகாரமாகப்  பார்க்கக்  கூடாது  என்றாரவர்.

“லவ் யாட்  பிளாசா  சம்பவங்கள்  போன்றவை  மீண்டும்  நிகழாமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்  என்று  பணித்திருக்கிறேன்”, என்று  நஜிப்  டிவிட்  செய்திருந்தார்.

இன்று  காலை  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  பேசிய  நஜிப், இவ்விவகாரத்தை   இன விவகாரமாக்கிப்  பெரிதுபடுத்திய  வலைப்பதிவர்களைக் கடுமையாகக்  கண்டித்தார்.