பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி, 1எம்டிபி தொடர்பாக பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தம்மையும் தொடர்புப் படுத்திச் செய்யப்பட்ட போலீஸ் புகாரை ஒரு “கொடிய சதி” என்று நிராகரித்தார்.
போலீஸ் புகாரில் சரவாக் ரிப்போர்டின் “முன்னாள் செய்தி ஆசிரியர்” என்று கூறப்பட்டுள்ள லெஸ்டர் மெலாஞி-யைச் சந்தித்ததே இல்லை என்றும் அவர் மறுத்தார்.
“லெஸ்டரை மெலாஞியைச் சந்திக்கவுமில்லை தொடர்புகொள்ளவும் இல்லை. அப்துல் ரஹ்மான் டஹ்லான்(பிஎன் வியூகத் தொடர்பு இயக்குனர்) போலீஸ் புகார் பற்றித் தெரிவித்தபோதுதான் அப்படி ஒருவர் இருப்பதே தெரிய வந்தது.
“சர்வாக் ரிப்போர்டிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னதுமில்லை, அவர்கள் வெளியிடுவதற்காக தகவல் எதுவும் கொடுத்ததுமில்லை”, என ரபிஸி ஓர் அறிக்கையில் கூறினார்.
சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரவுனுடன் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
“சரவாக் ரிப்போர்டுடன் நான் ஒத்துழைத்தது ஒரே முறைதான், சாபா வெட்டுமர ஊழல் விவகாரத்தில் மட்டுமே”, என்றாரவர்.
அப்துல் ரஹ்மான் இன்னொரு மரமண்டை. BTN – ல் இருந்து சுத்தமா மண்டையைக் கழுவி பூஜ்ஜியமாக வெளிவந்த டாக்டரு!. வெளிவந்த செய்தியை விசாரிக்காமலேயே போலிஸ் ரிப்போர்ட் கொடுப்பதருக்கு இவருக்கு மக்கள் பணத்தில் சம்பளம்!. நல்லா நடக்குது நாட்டு நடப்பு.
அப்படியென்றால் அந்த போலிஸ் புகார் செய்தவர் மீது மறு புகார் செய்யுங்கள்…. அப்பொழுதுதான் அவர்களுக்கு புத்தி வரும்…
அந்த்தர் பல்டி ஆரம்பம் ஆயிடிச்சி ,,, ராபிசி ,,,,
அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா. உங்கள் வாதத்தில் உண்மை எனில் தொடர்ந்து போராடுங்கள்.