1எம்டிபி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஜோடிக்கப்பட்டவை என்றும் எதிரணித் தலைவர்கள் பலர் அதன் பின்னணியில் இருப்பதாகவும் லெஸ்டர் மெலாஞி காணொளி ஒன்றில் கூறியுள்ளார்.
லெஸ்டர், தாம் சரவாக் ரிப்போர்டில் வேலை செய்ததாகவும் கிளேர் ரியுகாஸலைத் தலைமைச் செய்தியாசிரியராகக் கொண்டு செயல்படும் அந்த இணையத் தளத்துக்குச் செய்திகளை இட்டுக்கட்டிக் கொடுப்பது தம் பொறுப்பு என்றும் கூறினார்.
“1எம்டிபி திட்டம் பற்றி இவ்வாண்டு ஜனவரியில் கிளேர் என்னிடம் தெரிவித்தார். அன்வார் இப்ராகிமுக்காக முக்கியமான பணியைச் செய்ய வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
“நான் அதைச் செய்ய வேண்டும் என்றும் (டிஏபி எம்பி) டோனி புவாவும் (பிகேஆர் உதவித் தலைவர்) ரபிஸி(ரம்லி)-யும் சொல்வதுபோல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்”, என லெஸ்டர் குறிப்பிட்டார். அவரது காணொளி இப்போது முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், லெஸ்டர் சரவாக் ரிப்போர்டில் வேலை செய்ததே இல்லை என்கிறார் ரியுகாஸல்.
ரபிஸியும், லெஸ்டர் கூறியிருப்பதை மறுத்திருக்கிறார். இது 1எம்டிபி-மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதுமுள்ள கவனத்தைத் திசை திருப்புவதற்கான சூழ்ச்சி என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
காணொளியில் லெஸ்டர், சரவாக் ரிப்போட் அன்வார்மீதுள்ள “அன்பால்” 1எம்டிபி பற்றித் தப்புத்தப்பான தகவல்களை இட்டுக்கட்டி வெளியிட்டு வந்ததாகக் கூறியிருந்தார்.
இவனையும் ஒரு விளைப்போட்டு வாங்கிடார்களா?
இவ்வளவு நாள் இவன் உறக்கத்தில் இருந்தானோ ,,,,பெட்டியை கொண்டுவந்திருக்கிறோம் என்றவுடன் விழித்துக் கொண்டானோ ,,,