நஜிப் மீது குண்டுகளைப் பொழிகிறார் மகாதிர்

 

Mfiressalvoரமதான் மாதத்தில் நஜிப்பை தாக்குவதிலிருந்து ஒதுங்கியிருந்த மகாதிர் ஹரிராயா தொடக்கத்தில் நஜிப் மீது குற்றச்சாட்டு குண்டுகளை பொழியத் தொடங்கியுள்ளார்.

தாம் கூறுவதை செவிமடுக்காத நஜிப் பினாங்கில் பிறந்த கோடீஸ்வரன் ஜோ லவ் மற்றும் சிங்கப்பூர் தரப்பினர் கூறுவதை கேட்டுக்கொள்வதில் நஜிப் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார் என்று மகாதிர் வருத்தம் தெரிவித்தார்.

நஜிப்பை இத்தரப்பினர்களின் பிரதிநிதி என்றும் மகாதிர் வர்ணித்து விட்டார்.

நஜிப்புக்கு அவரது சொந்த ஆலோசகர்கள், மூன்று பிட்டீஷார் உட்பட, இருக்கிறார்கள். அரசாங்க விவகாரங்கள் குறித்து அவருக்கு ஆலோசனை கூற வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு அவர் பணம் கொடுக்கிறார்.

“பாலம் கட்டலாமா அல்லது விரைவு ரயில் பாதை அமைக்கலாமா என்று அவர் சிங்கப்பூரை கேட்கிறார். சிங்கப்பூர் முடியாது என்றதும் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டார்.

“ஜோ லவ் இவரது நண்பர் மற்றும் அவருக்கு இவர் மீது பிடி இருப்பதாகத் தெரிகிறது”, என்கிறார் மகாதிர்.

Mfiressalvo1மேலும், நஜிப் அவர்களுடைய பிரதிநிதி, தம்முடைய பிரதிநிதி அல்ல என்று தமது வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ள மகாதிர், அவர் தம்முடைய பிரதிநிதியாக நடந்து கொண்டிருந்தால் 1எம்டிபி போன்ற விவகாரங்கள் எழுந்திருக்காது என்றார்.

“நான் கூறிதை நஜிப் செய்யவில்லை என்று அவர் கூறியிருப்பது உண்மை. ஆனால், நான் ஏன் அவர் பதவி துறக்க வேண்டும் என்று கூறுவதற்கு அது காரணமல்ல.

“சிங்கப்பூருக்கான பாலத்தைக் கட்ட அல்லது இரட்டை தண்டவாளம் அமைத்து மின்சார ரயில்வே திட்டத்தை உருவாக்க அவர் மறுத்து விட்ட போதிலும் 13 ஆவது பொதுத் தேர்தலில் நான் அவருக்காக பரப்புரை செய்ததை அனைவரும் அறிவர்.

“பிஆர்1எம் மற்றும் ‘நான் பிஎம்மை நேசிக்கிறேன்’, ‘நான் உமக்கு ஆதரவு அளிக்கிறேன்’, மற்றும் இது போன்ற விளம்பர அட்டைகள் ஏந்துவதை நிறுத்த வேண்டும் என்பது பற்றிய எனது கருத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

“பொதுமக்களின் பாராட்டை பெற வேண்டும் என்று அவர் விரும்பினால், அவர் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று நான் கூறிய பலவற்றை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. “பணமே பிரதானம்” என்றார்.

“இருந்தும் நான் அவரை 13 ஆவது பொதுத்தேர்தலிலும் அதற்குப் பின்னரும் ஆதரித்தேன்”, என்றார் மகாதிர்.

எனினும், 1எம்டிபி பிரச்சனை பொங்கிவழிந்த பின்னர்தான் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததாக மகாதிர் மேலும் தெரிவித்தார்.