முன்னாள் பாஸ் முஸ்லிம்-அல்லாதவர் பிரிவு தலைவர் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டார்

HuPangபாஸ் ஆதரவாளர்கள் கிளப்பின் கூட்டு நிறுவனரான ஹு பாங் சௌ பாஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார். பாஸ் ஆதரவாளர்கள் கிளப் பின்னர் அக்கட்சியின் நான்காவது பிரிவாக தரம் உயர்த்தப்பட்டது.

கட்சியுடனான உறவை தாம் முறித்துக் கொண்டதை அவர் தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார். தாம் கட்சியின் புதிய தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.