இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும் முன்னாள் அதிபருமான எபிஜே அப்துல் கலாம் நேற்றிரவு மணி 11.25 அளவில் மாரடைப்பால் காலமானார்.
அப்துல் கலாம் மேகலாயா, சில்லோங்கில் இந்திய நிருவாக கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மயக்கமுற்றார். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பின்னர் அவர் மரணமுற்றார்.
அப்துல் கலாம் தமிழ் நாடு, இராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டில் ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்தார். தமது விடாமுயற்சியாலும் கடும் உழைப்பாலும் ராக்கெட் விஞ்ஞானியாக உயர்ந்த அவர் இந்தியாவின் “Missile Man என்றழைக்கப்பட்டார். ” மக்களின் அதிபர்” என்றும் அவர் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியா 2020 இல் உலகின் வல்லரசு நாடாடுகளில் ஒன்றாக விளங்கும் என்பது அவரது கனவாகும்.
அப்துல் கலாம் இந்தியாவின் 11 ஆவது அதிபராக 2002 லிருந்து 2007 வரையில் பதவி வகித்தார். தம்மை “டாக்டர்” என்று அழைக்கக் கூடாது என்பது அப்பெருமகனின் வேண்டுகோளாகும்.
உடைகள் மற்றும் நூல்கள் அடங்கிய இரு பெட்டிகளுடன் இந்தியாவின் அதிபர் மாளிகையில் குடியேறிய அப்துல் கலாம் 2007 ஆம் ஆண்டில் அவரது பதவிக் காலம் முடிந்து அம்மாளிகையை விட்டு அதே இரு பெட்டிகளுடன் வெளியேறிய ஊழற்ற தலைவராவார்.
குழந்தைகள், மாதர்கள் மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக அப்துல் கலாம் தம்மை அர்பணித்துக் கொண்டார்.
அதிர்ச்சியான செய்தி. நல்ல தமிழ் மொழி ஆர்வலர். வானுயரப் பறந்தாலும் தமிழரை விட்டு நீங்காதவராக வாழ்ந்தார். அன்னாரின் உயிர் சாந்தி அடைய உலக வாழ் தமிழர் ஒன்று சேர்ந்து பிராத்திப்போம்.
அப்துல் கலாம் போன்ற தன்னலமற்ற தலைவர்களை தற்போதைய காலங்களில் காண்பதரிது. அப்படியே ஒரு சிலர் இருந்தாலும், அவர்கள் பேர் போடவும் முடியாது. உலகம் அழிவை நோக்கி படு வேகமாக செல்கிறது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
வறுமையில் வாடுபவனும் முன்னேறலாம் என்பதற்கு கலாம் ஓர் எடுத்துகாட்டு. ஏழ்மையில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஏணிப்படியாக வாழ்ந்தவர். சிறந்த ஒரு பிதாமகனை இந்தியா இழந்தது. அனுதாபங்கள்!
மானிடன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை.ஆனால் மதிநுட்பம் கொண்ட அறிய விஞானிகள் நம்மை விட்டுப்பிரியும்போது நெஞ்சம் உருகுகிறது,வலிக்கிறது.திரு அப்துல் கலாமின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
தமிழுக்கும் .தமிழர்க்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானி.அப்துல் கலாம்
எதிர்பாரத அதிர்ச்சி செய்தி.ஆழ்ந்த அனுதாபம்!.
ஆழ்ந்த இரங்கல் ..
கடின உழைப்பால் உயர்ந்த மனிதர் கலாம் ..
ஒருவாரத்துக்கு முன்னாடி பாரதிய ஜனதாகட்சி அமைச்சர் ஒரு நிகழ்வில் ராமேஸ்வர விஞானியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினான் .. மாங்கா மடையன் ..பலர் விமர்சித்ததும் பாவாடை சனதா கட்சி நொண்டி விளக்கம் கொடுதானுக!! ஒருவாரத்தில் அதே வடநாட்டில் மாமேதையோட உசுரு போச்சு ..
இல்லுமினாட்டி கம்முனாட்டிகள் உருசிய நாட்டு விசமேதும் பயன்படுதினானுவளோ என்னமோ யாருகண்டா ..அமெரிக்காவில் பல பிரபல்யங்கள் மர்மமான முறைகள் இறப்பார்கள் ..இறுதியாக ஆட்டகார அரசன் கருப்பு டைமன் ஜாக்சன் .. கலாம் இறப்பு மாரடைபாகவும் இருக்கலாம் /செயற்கையாகவும் இருக்கலாம் .. ராஜு காந்தி இறப்புக்குமுன் பல விசித்திரங்கள் நடைபெற்றது .. தமிழகம் வருமுன் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் போர்வையில் இரண்டு அழகிகள் அவரை சந்தித்துள்ளார்கள் ..அவரது காரிலேயே பாதுகாப்பு வீரர்கள் அற்றநிலையில் பயணம் செய்துள்ளார்கள் ..
ராஜு காந்தி கொலையில் புதைந்துள்ள சூட்சுமம் அறியவேனும் என்றால் சுப்ரமணிய சாமிய புடிச்சி தொலை உரித்து உப்புகண்டம் போட்டால் உண்மை வெளிவரும் .. ஒட்டுமொத்த இந்தியாவே முடிவெடுத்தாலும் அவன்மேல் கைவைக்க முடியாது ..
பலபேரோட குடியைகெடுக்கிற கிழட்டு சகுனியெல்லாம் இன்னும் தமிழகத்தில் உயிர்வாளுது ..பலபேருக்கு அறிவமுதை ஊட்டும் தன்னலமற்றவர்கள் சீக்கரமே சென்றுவிடுகிறார்கள் !!
இறைவா ஏன் இந்த சோதனை ?
இந்தியாவுக்கு மட்டுமல்ல அகில உலகுக்கே பேரிழப்பு.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக!!! உலகை விட்டு பிரிந்தாலும் மனதை விட்டு பிரியா மாமனிதர்!!!
கலாம் இறப்பதற்கு முன் அறிந்த பெண்ணால் பரபரப்பு…!
July 27, 20158:33 pm
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடைய புகைப்படத்திற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சரான நீரா யாதவ் மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மாலை போட்ட நேரமோ என்னவோ இன்று உண்மையிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் கலாம். ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இப்படி நடந்து கொண்டார் அமைச்சர் நீரா யாதவ்.
சம்பந்தபட்ட நிகழ்ச்சியானது ஒரு பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழாவாகும்.
இதற்கு சிறப்பு விருந்தினராக நீரா யாதவ் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு முன்பு அவர் அப்துல் கலாம் படத்திற்கு மாலை போட்டு வணங்கினார்.
அவர் மட்டுமல்ல, பாஜக எம்.எல்.ஏ மனீஷ் ஜெய்ஸ்வால், பள்ளியின் முதல்வர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் படத்தை வணங்கினர்.
யாருமே இந்த செயல் தவறு என்று எடுத்துச் சொல்லவில்லை என்பதுதான் வேதனையானது.
இந்த சம்பவம் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நீரா யாதவ், “பெரிய மனிதர்கள், மக்களால் மதிக்கப்படும் தலைவர்களுக்கு இது போல மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்தான்.
கலாம் மாபெரும் விஞ்ஞானி. எனவேதான் அவருக்கு மாலை அணிவித்து வணங்கினேன்” என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் அச்சம்பவத்தின் சர்ச்சை அடங்காத நிலையில், நிஜமாகவே அவர் நம்மை விட்டு பிரிந்து சென்ற சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆழ்ந்த அனுதாபங்கள்
பாரத தாய் ஈன்றுஎடுத ,இன் நுரண்டின் மிக சிறந்த மாமனிதன் .
இந்த தமிழன் ஐரோப்பாவின் பாராளும் மன்றத்தில் கணியன் பூங்குன்றனாரின் -யாதும் ஊரே யாவரும் கேளீர் – என்ற வாக்கியங்களை அங்கு இருந்தோர்க்கு தெரிவித்தார் பெருமையுடன்– 2000 ஆண்டுகளுக்கு முன்பே பூங்குன்றனார் என்ற தமிழர் உலக ஒற்றுமையை பற்றி தெரிவித்து இருந்தார் என்று அவர்களுக்கு அவரின் பேச்சின் வழி தெரிவித்தார். அவரின் பேச்சு வெகுவாக பாராட்ட பட்டது. அன்னாருக்கு எனது அனுதாபங்கள் .
இறுதி வரை இந்தியராகவே வாழ்ந்த திரு.அப்துல் கலாம் காலமானார் !
ஏவுகணை விஞ்ஞானியாக சிறந்து விளங்கிய அப்துல் கலாம் இந்திய நாட்டின் உயர் பதவியான குடியரசு தலைவராகவும் பொறுப்பேற்றார். தமிழராக எளிய குடும்பத்தில் பிறந்து , தமிழ் வழிக் கல்வியில் பயின்று இந்தியாவின் உயர்ந்த பதவிக்கு சென்றவர் திரு. அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இறுதி வரை இந்தியராக வாழ்ந்த காரணத்திற்காக இந்திய அரசின் நிலைப்பாட்டையே தன்னுடைய நிலைபாடாக கருதினார். தமிழக மீனவர்கள் படுகொலைக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல், கூடங்குளம் அணு உலையால் எந்த பாதிப்பும் இல்லை என்று அரை மணி நேரத்தில் சான்றிதழ் வழங்கியும் , கொடுங்கோலன் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று இலங்கை சென்று அங்கு மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியும் இந்திய அரசுக்கு உண்மையாக செயல்பட்டார் திரு. அப்துல்கலாம் அவர்கள் . வாழ்நாளில் தான் பிறந்த தமிழ் இனத்தை பற்றிக் ஒரு நொடி கூட கவலைப்படாமல் இந்தியாவை பற்றி மட்டுமே சிந்தித்து ஒரு தலைசிறந்த இந்தியராக வாழ்ந்தவர் திரு, அப்துல் கலாம். தமிழக மாணவர்கள் கோடிக் கணக்கான பேர்களை இந்தியராக மாற்றிய பெருமையும் அன்னாருக்கு சேரும்.
தமிழ்த் தேசத்தின் பிள்ளையாக பிறந்து இறுதி வரை இந்தியராக வாழ்ந்து இன்று உலகப்புகழ் அடைந்த திரு அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு தமிழர்களின் சார்பில் நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாபெரும் தலைவரை / விஞாணியை / உலகம் போற்றும் மாமனிதரை நாம் இழந்தோம் .
அவர் புகழ் என்றும் நிலைக்கும் .
அவரது குடும்பத்திற்கு கண்ணீர் அஞ்சலி .
தமிழ் மறையே மறைந்தது ஏனோ,
தமிலமுதாக உச்சரிப்புகள் இனி காண்பேனோ,
2004-ல் பிரவாசி மாநாடு நிறைவு விழாவில் கரங்குழுக்கிய பசுமையான கர இறுக்கம் நீங்கா நிழாலாடுகிறதே ஐயா.
” பிறப்பு ஒரு சம்பவம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் ” …… சொல் தவறா செயல் வடிவம் கொடுத்த தங்க மகன் நீர் அன்றோ ஐயா…
வாழும் வரை சுவாசிப்போம்….உந்தன் எதிர்பார்ப்பை ….
இறுதி முச்சிவரை கரையேற்றுவோம் …. உந்தன் உச்சரிப்பை…
”அக்னி சிறகுகளின் நாயகன், இந்தியாவின் தலைச்சிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் இறப்பு.கனவு காணுங்கள் என்று சொன்னவரே , இந்த செய்தியும் ஒரு கனவாக இருக்க கூடாதா என ஏங்குகிறேன்….
நம் அனைவருக்கும் ஒரு பேரிழப்பு,,
நல்ல ஆத்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி!!
ம்ம்ம் என்ன செய்வது ,உயிர் ஒன்று இருந்தால் பிரியத்தான் செய்யும் ,,ஆனால் இவர் பெரிய சாதனை செய்து விட்டுதான் சென்றால் ,,மிக சிறந்த மனிதன் ..என்ன செய்வது ,தனக்கு பதவி இருக்கும் காலத்திலேயே அந்த பதவியை சரியாக பயன் படுத்த தெரியவில்லையே .தமிழ் ஈழமக்களை இந்த ராஜ பக்சா கொள்ளும் பொது இவர் பகிக்ப்ங்கிரமாக குரல் கொடுக்க வில்லையே ,தமிழ் ஈழ மக்களுக்கு ஒண்ணுமே செய்ய வில்லையே .அன்றே தன் அதிகாரத்தை கொண்டு தன் சக்தியை கொண்டு ராணுவத்தை ஏவி விட்டு இருக்கலாம் அதையும் செய்யவில்லை ..இவரை காட்டிலும் புரட்சி தலைவர் MGR எவ்வளவோ தெலாம் என்று தெரிகிறது .ம்ம் இருந்தாலும் அன்னாரின் சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சேர் பண்ணுங்க. மக்களிடையே உண்மையை கொண்டு போய் சேருங்கள்.
ஜார்காண்ட் கல்வி அமைச்சர் நீரா யாதவ் சில வாரங்களுக்கு முன்பு….டாக்டர் அப்துல் கலாம் புகைப்படத்திற்க்கு….மாலை அணிவித்து… பொட்டு வைத்து….பூஜைகள் செய்துள்ளார் இந்துகள்…. ஒருவர் இறந்துவிட்டால் தான் இப்படி சடங்கு செய்வார்கள் .
இந்த செய்தி….சில ஊடகங்களிலும் வந்தது அந்த நேரத்தில்…. கலாம் இறந்து விடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.சூழ்ச்சிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கேள்வி எண் 1
இரண்டு மாதம் முன்பே…. அப்துல் கலாம் இறந்து விடுவார் என்ற செய்தி முன்பே எப்படி….. ஜார்காண்ட் மாநில பி.ஜே.பி. கல்வி அமைச்சருக்கு வந்தது ?
கேள்வி எண் 2
அப்துல் கலாம் உடல்நிலை மோசமாக இருந்தது என பி.ஜே.பி நடுவன் அரசுக்கு தெரிந்து இருந்தும்….. எதற்க்காக….. மேகாலாய அரசு… விரிவுரை ஆற்ற…. அப்துல் கலாம் அவர்களை மத்திய அரசு அனுப்பியது……?
கேள்வி எண் 3
முன்னாள் ஜனாதிபதிக்கு 6-30 மணிக்கு மாரடைப்பு
ஏற்பட்டுள்ளது. 7-00 மணிக்கு மருத்துவ மணையில் ICU வார்டில் சேர்த்துள்ளார்கள். அப்படி என்றால்…. அருகில்… மருத்துவமணைகள் இல்லாத இடத்தில்…..ஒரு முன்னால் ஜனாதிபதியை விரிவுரையாற்ற அனுமதித்தது ஏன் ?
மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும். “ஏனென்றால் இந்தியாவில் மரணதண்டனை அரசியல் சார்பாகவே வழங்கப்படுகிறது” என்று மரணதண்டனைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார் அப்துல் கலாம். (யாக்குப் மேனன்னுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டது)
இந்நிலையில் விவசாயிகளை பாதிக்கும் “நில அபகரிப்பு சட்டத்தையும்” அந்த நிலத்தை மேக்கின் இந்தியா என்ற போர்வையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு (வெளிநாடுகளுக்கு) தாரைவார்த்து கொடுக்கும் மோடியின் செயல்பாடுகள், இந்தியாவுக்காக தன்னையே அர்ப்பணித்த கலாமுக்கு நெருடலாகவே இருந்து வந்துள்ளது. சமீப காலமாக தன் மனக்குமுறலை நெருங்கிய வட்டாரத்தில் வெளிப்படுத்தியும் வந்துள்ளார். எங்கே அறிக்கையாக வந்து விட்டால் நில அபகரிப்பு மசோதாவுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து உங்கள் போடோவுக்கு மாலை போட்டு பொட்டு வைத்து பூஜைகள் செய்து விடுவோம் (அதாவது கொன்று விடுவோம்) என்று மறைமுகமாக மிரட்டப்பட்டுள்ளார்.
அடுத்ததாக வியாபம் ஊழல் பெரிதுபடுத்தபட்டுள்ளதால் அதை மறக்க மக்களுக்கும் அதை மறக்கடிக்க மிடியாவுக்கும் ஒரு பெரும் செய்தியை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு.
அதுமட்டுமல்லாமல் அவர் இறப்பதற்கு முன்பு கடைசி போட்டோ என்று இப்போது பரப்பப்படுகின்ற போட்டோ உண்மையில் அவர் கடைசி மிடிங்கின் போது எடுத்தது அல்ல அவர் குடியரசு தலைவராக இருந்த போது டெல்லி சங்கித நாடக அகடமியில் ஒரு விழாவின் போது எடுக்கப்பட்டது அது திட்டமிட்டு பரப்பபடுகிறது
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஒரு விஷயம் உறுதியாகிறது இந்த மரணத்தை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட கிந்திய அரசு முன்வருமா ? ஊர்குருவி காதோர கூறிவிட்டு பறந்துபோனது !
அக்கினிப் பறவை சிறகை விரித்து பறந்துவிட்டது…! வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்…! இவரைப் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…!
கனவு காணுங்கள் என இளைஞ்ர்களை பரவசப்படுத்திய கலாம் கனவாகிப் போனாயே .
கணுவு காணுங்கள் ,கனவு கண்டால் சோறு கிடைக்குமா ,,உழைத்தால் தான் சோறு கிடைக்கும் ,