சட்டத்துறைத் தலைவராக(ஏஜி) இருந்த அப்துல் கனி பட்டேய்லின் சேவை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
‘உடல்நலக் குறைவு’ காரணமாக அப்துல் கனியின் சேவை முடிவுக்கு வருவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்ஸா அறிவித்ததாக பெர்னாமா கூறிற்று.
அவருக்குப் பதிலாக முன்னாள் கூட்டரசு நீதிபதி முகம்மட் அபாண்டி அலி புதிய ஏஜி-ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
“பிரதமரின் ஆலோசனையின்பேரில், அபாண்டி ஜூலை 27-லிருந்து சட்டத்துறைத் தலைவராக நியமிக்கப்படுவதற்குப் பேரரசர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
“கனி 2015 அக்டோபர் 6-இல் பணி ஓய்வு பெறும்வரை நீதித்துறை சட்ட அதிகாரியாக நாட்டுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவார்”, என அலி ஹம்ஸா ஓர் அறிக்கையில் கூறினார்.
கனிக்கு அக்டோபர் 6-இல் அறுபது வயதாகும். 60, அரசாங்கப் பணியாளர்கள் பணிஓய்வு பெறும் வயதாகும்.
ஆஆஆ … இவனா ? நாசமா போச்சு சட்டதுறை !
கனிக்குப் பதிலாக இன்னொரு சனி!