பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதிய அமைச்சரவை பட்டியலுடன் பேரரசரைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று அம்னோவின் குரலாக விளங்கும் உத்துசான் மலேசியா ஆன்லைன் நள்ளிரவுக்குப் பின்னர் அறிவித்திருந்தது.
இன்று பிற்பகல்கூட அறிவிக்கப்படலாம் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நஜிப் 1எம்டிபி விவகாரத்தைக் கையாண்ட விதத்தைக் குறைகூறி வந்த துணைப் பிரதமர் முகைதின் யாசின் புதிய அமைச்சரவையில் இடம்பெறாமல் போகக் கூடும் என மலேசியன் இன்சைடர் கூறியுள்ளது.
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி துணைப் பிரதமராக நியமிக்கப்படலாம் என்றும் அது ஆருடம் கூறியது.
ஆனால், நஜிப்பின் உறவினரான ஹிஷாமுடின் உசேன் அப்பதவியில் அமர்த்தப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
அமைச்சரவை மாற்றம் வந்தால் ஜி.பழனிவேலின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.
உத்துசான் மலேசியா ஆன்லைன், துணை அமைச்சர் ஒருவர் முழு அமைச்சராவார் என்றும் இருவர் துணை அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
துணை பிரதமர் முகைதின் யாசினை கழட்டி விட்டால், JOHOR மாநிலம் கழட்டி கொள்ளுமாமே, அட தப்பா நினைக்காதீங்க,
JOHOR மாநிலம் UMNO பிடியிலிருந்து கழட்டி கொள்ளுமாம்.
அதாவது,JOHOR மாநிலத்தில் UMNO-வுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பெரிய ஆப்பு காத்திருக்கிறதாம்.
அமைச்சரவை மாற்றத்தில் இடம்பெற போகும் “அலிபாபாவும் 40 திருடர்களும்” யாரோ ?
அதனால் தான் வெளியே அவர் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறாரோ!
யாரும் செய்யாத காரியத்தை நஜிப் செயதுவிடப்பார்க்கிறாரா? இவ்விஷயத்தில் தன முன்னோர்கள் காட்டிய வழியை தான் அவர் பின்பற்றுகிறார். துங்கு, மகாதிரை தூக்கவிலையா? மகாதிமிர், மூசா ஹீத்தாமை தூக்கவில்லையா? கபார் பாபாவை தூக்கவில்லையா? அன்வாரை தூக்கவில்லையா? அது சரி, மக்கள் நஜிப்பை தூக்கலாம். ரோசம்மாவை யார் தூக்குவது? தேவுடா!