முகைதின் நீக்கப்பட்டார், ஜாஹிட் புதிய துணைப் பிரதமர்

pmo oமுகைதின்  யாசின்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  கழட்டி  விடப்பட்டார். இன்று  பிற்பகல் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  புதிய  அமைச்சரவையை  அறிவித்தார்.

அம்னோ  உதவித்  தலைவரும் உள்துறை  அமைச்சருமான அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  புதிய  துணைப்  பிரதமராக  அறிவிக்கப்படிருக்கிறார்.

1எம்டிபி  விவகாரத்தில்  குறைகூறி  வந்ததற்காக முகைதின்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  நீக்கப்படுவார்  என்று  வதந்திகள்  சிறிது  காலமாக  உலவி  வந்தன.

1எம்டிபி  விவகாரத்தில்  குறைகூறி  வந்த  இன்னொருவரான முகம்மட்  ஷாபி  அப்டாலும்  புதிய  அமைச்சரவையில்  இடம்பெறவில்லை. சாபா  அம்னோ  உதவித்  தலைவரான  ஷாபி, புறநகர், புறநகர்  மேம்பாட்டு  அமைச்சராக  இருந்தவர்.

அமைச்சரவையில்  புதிதாக  சேர்ந்துள்ள  ஒருவர்  சாலே  சைட்  கெருவாக். இவர்  சாபா  சட்ட  மன்றத்  தலைவராவார்.

நஜிப்பின்  வலுவான  ஆதரவாளர்களில்  ஒருவரான  சைட் கெருவாக், தொடர்பு, பல்லூடக  அமைச்சராக  பொறுப்பேற்கிறார்.

ஏற்கனவே  அந்த  அமைச்சுக்குப்  பொறுப்பாக  இருந்த  அஹ்மட்  ஷப்ரி  சிக், விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  அமைச்சுக்குச்  செல்கிறார்.