பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முகைதின் யாசினைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது ஒரு சிரமமான முடிவுதான் என்றாலும் அமைச்சரவை கருத்துவேறுபாடின்றி ஒன்றாக செயல்படுவதற்கு அப்படிச் செய்வது அவசியமாயிற்று என்றார்.
“முகைதினை வெளியேற்றுவது என்பது சிரமமான முடிவுதான். ஆனாலும், அமைச்சரவை ஒன்றாகச் செயல்படுவதற்கு நான் வலுக்கட்டாயமாக அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று.
“முகைதினுக்கும் இப்போது அரசாங்கத்தில் இல்லாத மற்ற அமைச்சர்கள், துணை அமைச்சர்களுக்கும் அவர்களின் பங்களிப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என நஜிப் புத்ரா ஜெயாவில் அமைச்சரவை மாற்றத்தை அறிவித்த பின்னர் கூறினார்.
அமைச்சர்கள் பொதுமக்களிடையே கருத்துமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுவில் பேசுவது சரியல்ல என நஜிப் குறிப்பிட்டார்.
“அது கூட்டுப் பொறுப்பு என்ற கோட்பாட்டுக்கு எதிரானது”, என்றாரவர்.
வடே… போச்சே…. வரும்… ஆனா வராது… வச்ச நா ஆப்பு…
முகைதீனுக்கு அரசியல் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது என்று சொல்லலாமா?
யாருக்கோ காலம் நெருங்கி விட்டது
நாட்டின் நாணயம் மங்கும் வேளை
பிரதமர் இனி அதை மீட்டுவாரா ?
ஹமிட் ஒரு சாமானியர்
நாட்டின் அடுத்த நகர்வு
100 பில்லியனை தாண்டும்.
கூட்டுப் பொறுப்பு என்றால்??? கண்டும் காணாததுபோல் அனைவரும் குருடர்களாகவும் ஊமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதோ?? அல்லது ராமா ராமா ஆடுறா ராமா என்று ஜால்ரா போடா வேண்டுமோ?? IMDB கடன் விவகாரத்தில் மக்கள் கோரிக்கைபோல் நல்ல விளக்கம் அளிக்கவேண்டும் என்றுரைத்த துணைப் பிரதமருக்கே இந்த கதி என்றால் மக்களின் நிலை??? சர்வாதிகாரம் ஜனநாயகத்தை அண்ணா கோண்டா போல் அப்படியே விழுங்குகிறது போலல்லவா இருக்கிறது!!!
கூட்டுப் பொறுப்பு என்ற கோட்பாடு இதற்கு மட்டும்தானா அல்லது எல்லா விசயங்களுக்குமா ???
JOHOR மக்களை அவமதிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை நஜிப்@அல்தாந்துயா பயன்படுத்தி கொண்டார். இனிமேலும் நஜிப்@அல்தாந்துயா-வை JOHOR மக்கள் ஆதரித்தால், தன் முகத்தில் தாமே உமிழ்ந்து கொண்டதற்கு சமமாகும்.
கொள்ளை அடிப்பதற்கு அமைச்சரவை கருத்துவேறுபாடின்றி ஒன்றாக செயல்படுவது அவசியம், என்ன ஒரு ஞானதயம், நடப்பு அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற நியாயமான கருத்து.
என்ன பழனி ! அமைச்சரைவியிலிருந்து நீக்கியாச்சு !
நஜிப் இந்தியர்களுக்கு செமையா செய்வாரு ! செமையா செய்வாரு ! என்று கூவீனீங்க, இரண்டு இந்திய அமைச்சர்களாக இருந்ததை, ஒரு இந்திய அமைச்சராக குறைத்து, நஜிப் இந்தியர்களை மட்டுமின்றி உங்களையும் செமையா செஞ்சிட்டாரு ! செமையா செஞ்சிட்டாரு !
அப்புறம் என்ன பழனி, எப்போ கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியை ராஜினமா செய்ய போறீங்க ?
மு ஹி ஹி ஹி டின் அடுத்து என்ன திட்டம்? பிரச்னை அம்னோவில். ஆப்பு தமிழனுக்கு. இப்போழுது ஒரு முழு அமைச்சர் அதுவும் தலையாட்டி பொம்பை.
கோயில் கோயில ஜன்ஜிஜி பன்ன காசு எப்படி சார்…உங்களைதான் பழனி சார் …..சுப்ரமணியம் சார் கொடுப்பாரா…மலேசியா நாணயம் விழுந்துவிட்டது 1ம் பிடி வராது ..மரம் ஏறி தேன் எடுப்பவன் நக்காமல் இருக்கமாட்டான் அதற்க்குனு எல்லா தேனையுமா நக்குவது கொஞ்சம் நகிட்டு மக்கள்கிட்ட மற்றதை கொடுங்கள் ….எதனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாடிலே சொந்தநாடிலே ….அடுத்த தேர்தலுல திருட்டு ஒட்டு போடதிங்க லைட்ட நிப்பாடாதிங்க ….அம்னோ..மசிச..ம இ க ..திருதிகொளுங்கள்…இல்லையேல் ஆண்டவன் வெப்பான் ஆப்பு……ஒ கே வா
நீக்கியாச்சு ….அடுத்து எப்ப சிறைச்சாலை ,????