பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர்கள் ஐவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை புதிதாக எழுவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறாரக்ள்.
புதிய அமைச்சர்கள்:-
-வில்வ்ரெட் மட்யுஸ் தங்காவ் (அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர்)
-ஹம்சா சைனுடின் (உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர்)
-வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் (இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர்)
-மாஹ்ட்ஸிர் காலிட் (கல்வி அமைச்சர்)
-அஸலினா ஒஸ்மான் சைட் (பிரதமர்துறை அமைச்சர்)
-ஒங் கா சுவான் (அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர்II)
-முகம்மட் சாலே துன் சைட் கெருவாக் (தொடர்பு, பல்லூடக அமைச்சர்)
புதிய துணை அமைச்சர்கள்
-முகம்மட் ஜொஹாரி பாஹாரோம் (தற்காப்புத் துணை அமைச்சர்)
-மாஸ் எர்மியாத்தி சம்சுடின் சுற்றுலா, பன்பாட்டுத் துணை அமைச்சர்)
-நூர் ஜஸ்லான் முகம்மட் (உள்துறை துணை அமைச்சர்)
-செனட்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி (பிரதமர் துறையில் [சமய விவகார] துணை அமைச்சர்)
-செனட்டர் சோங் சின் வூன் (கல்வி துணை அமைச்சர்)
-ரீசால் மரைக்கான் நைனா மரைக்கான் (வெளியுறவுத் துணை அமைச்சர்)
-அஹ்மட் ஜஸ்லான் பின் யாக்கூப் (புறநகர், புறநகர் மேம்பாட்டுத் துணை அமைச்சர்)
– மாஸ்ரி அனாக் குஜாட் (உள்துறை துணை அமைச்சர்)
-ஜொஹாரி அப்துல் கனி (நிதி துணை அமைச்சர்)
அகற்றப்பட்ட அமைச்சர்கள்
– முகைதின் யாசின் (முன்னாள் துணைப் பிரதமர்/ கல்வி அமைச்சர்)
– முகம்மட் ஷாபி அப்டால் (முன்னாள் புறநகர், புறநகர் மேம்பாட்டு அமைச்சர்)
– ஹசான் மாலேக் (முன்னாள் உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர்)
– ஜி.பழனிவேல் (முன்னாள் இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர்)
– இவோன் எபின் (முன்னாள் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர்)
அக்கினி குஞ்சு ஒன்று விழுந்து விட்டது அம்னோவில் ,,,,அது வெந்து தீர்த்து விடும் அடுத்த பொது தேர்தலில் ,,,,,
பிரச்னை அம்னோவில் , பழனியை நீக்குவது என்ன நியாயம் ?
உங்களையெல்லாம் ஆளப்போவது ROSMAH தான் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன….
எது எப்படியோ!! ம இ காவுக்கும் ஆப்புதான். 2 அமைச்சர்கள் பதவியிலிருந்து ஓர் அமைச்சராக நல்ல ஆப்பு!!!
சபாஸ் . MIC தலைவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டு ஒன்றாகிப்போனது . இது நம் தலைவர்களின் பதவி போராட்டத்தால் விளைந்த பயன். ஒன்றாக இருப்பது அடுத்த தேர்தலில் KOSONG ஆகி விடும்.
நாட்டை இந்தோபங்களசிய ஆக்கியவனுக்கு நாட்டின் 2 உயர் பதவியா?
இந்திய சமுதாயத்திற்கு செய்த சேவைக்கு பரிசு …ம இ காவுக்கு கிடைத்த பரிசு ….மேலாயு..சீனா..இந்திய…இன்னும் கொஞ்சநாளில்…நாம் எல்லாம் ஒரு நாளைக்கு லாஇன் லாஇன் என்று மாட்றபடுவோம்…இந்திய தலைவர்களே இந்திய சமுதாயமே சிந்தியுங்கள் …..
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
நம் இனம் பிரிந்து கிடப்பது தெள்ளத்தெளிவு .இந்நிலையில் நம்மில் யாரை எந்த பதவியில் இருந்து நீக்கினாலும் கேட்க ஒன்றுபட்ட குரல் இல்லை
அஹ்மட் சஹிட் ஹமிடி துணைபிரதமரா? முகம்மது பின் துக்ளக் கல்லறை திறந்து கிடக்கிறதே!
ஒற்றுமை இல்லாத சமுதாயத்துக்கு கிடித்த மா பெரும் பரிசு .
ஒன்றில் இரண்டு மறுபடியும் ஒன்று சபாஸ் MIC தலிவர்களுக்கு .
பழனி நீக்கர்திற்கு காரணம் அவரும் உண்மையை பேசியதே . ம இ கா விற்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்று கூறியதுமே அவருக்கு ஆப்பு அடித்து விட்டனர் ம இ காவில் உள்ள ஒனாயிகள். சுப்ராவும் ஒரு கேடுகெட்ட தமிழ் பட அரசியல்வாதியே .
ஊமைத்துரை அப்பவே தேர்தல் நடத்தி இருந்தால் இந்நிலை வந்திருக்குமா?
எம்ஐசி மக்களை பற்றி சிந்திக்கவே மாட்டென்கிரானுவ!
அம்புட்டும் சுயநலம் …
முடிந்தளவு ஆளாளுக்கு எவ்வளவு சுருட்ட முடியுமோ சுருடிகிறானுவ!
பழனியை நீக்க ஆர்ஓஎஸ் மற்றும் பெரும் தலைகளுடன் சேர்ந்து போட்ட சதியாட்டத்தில் டாக்டர் அணி வெற்றி பெற்றது. பழனியின் முழு அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று சரவணன் நம்பினார். முழு அமைச்சர் பதவியை இரண்டு துணை அமைச்சர்கள் பதவியாக மாற்றினால் தமக்கும் பதவி கிடைக்கும் என்று விக்னேஸ்வரன் எதிர்பார்த்தார். இவர்களின் சுயநலமிக்க ஆசைகளுக்கு நஜிப் ஆப்பு வைத்தார். கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய சமூகத்திற்கு இரண்டு முழு அமைச்சர்கள் பதவி கிடைப்பதை தடுத்து வந்த துரோகிகள் ஒழிக்கப்பட்டு இரு முழு அமைச்சர்கள் பதவி கிடைத்த கொஞ்ச காலத்தில் அதே துரோகிகளின் எடுபிடிகள் இருந்த பதவியையும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள். இனி .இந்த தலைவர்களையும் மஇகாவையும் நம்பி ஒரு புண்ணியமும் இல்லை.
மக்கள் மனதில் இலைமறை காயாக இருந்த “1MDB” கொள்ளையில் நஜிப்பின் பங்கு, இந்த அமைச்சரவை மாற்றத்தினால், முக்கியமாக “1MDB” கொள்ளையில் நஜிப் முக்கிய பங்கு வகுக்கிறார் என்பதை நஜிப்பே மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ ஒப்பு கொண்டுள்ளார்.
என்னதான் விசாரணை செய்து நஜிப் நேர்மையானவர் என்று சான்றிதழ் கொடுத்தாலும், “அல்தாந்துயா” என்றாலோ “1MDB” என்றாலோ, மக்கள் நினைவுக்கு வருபவர் நஜிப்பாகதான் இருக்கும்.
சாமிவேலு ஐயா இருக்கும் வரை ம.இ.கா. செல்வாக்கு இழந்த கட்சியாகவே இருக்கும். தமிழர்களின் முன்னேற்றம் என்பது சாமிவேலுவின் குடும்ப முன்னேற்றமே!
எவ்வளவோ முயன்று இன்றைக்கு பழனியைக் கழற்றிவிட்டீர்கள், சாதனைத் தலைவனின் குள்ள நரிக்கூட்டம் அடுத்த நன்றாக கும்மாளம் போடுவார்கள். அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் உங்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
பழனி அவர்களே!! முற்றாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு?? ம இ காவில் / பாரிசானில் நடந்த எல்லா வண்டவாளங்களையும் அவிழ்த்துவிட வேண்டியதுதானே??? கூண்டோடு கைலாசம் போகட்டும்!! அடுத்து வரும் தலைவனுக்கு நல்ல பாடமாக அமையட்டும்!!! போகும் முன் நல்லதை ஒருமுறையாவது செய்திட்டுப் போ!!!!
பழனிவேல் nallavar
நல்லவர்க்கு என்கைய காலம்
ம இ காவில் அப்படி யாரேனும் உள்ளார்களா ?????? நல்லவர் என்று ,,,,