அம்னோ அவை துணைத் தலைவர் முகம்மட் அசீஸ், துணைப் பிரதமர் பதவியிலிருந்து முகைதின் யாசினைத் அகற்றியதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சாடியுள்ளார்.
ஜோகூர் சட்டமன்றத் தலைவரும் அம்னோவில் 50 ஆண்டுகளுக்குமேல் உறுப்பினராகவுமுள்ள முகம்மட், நஜிப் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் எனக் குற்றம் சாட்டினார்.
“இது அம்னோவுக்கு நல்லதல்ல. அவரது செயல் கட்சியை அழித்து விடும்.
“நஜிப்புக்கு இந்த ஆலோசனை எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. இனி அதன் விளைவுகளை அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கும்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்தது.
1எம்டிபி-இன் ரிம41.8 பில்லியன் கடன் பற்றிக் கவலை தெரிவிப்போரை நஜிப் அடக்கிவைக்கப் பார்க்கிறார் என முகம்மட் குறைகூறினார்.
“மக்களுக்குக் கவலைதரும் ஒரு விவகாரம் பற்றி அம்னோ துணைத் தலைவர் பேசுவது தப்பா?
“1எம்டிபியா, அம்னோ நிலைத்திருப்பதா- இதில் எது முக்கியம் என்பது நஜிப்புக்குத் தெரிந்திருக்க வேண்டும்”, என்று கூறிய அவர், 1எம்டிபி-யால் கட்சி அலைக்கழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“நஜிப்பும் நவீன 40 திருடர்களும்” என்ற அங்கத்தில் காலியாக இருக்கும் மூன்று இடங்களில் ஒரு இடத்தை எப்படியும் அடைய வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறார் முகம்மட் அசீஸ்.