நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்க்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமானால் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அம்னோவின் நாடாளுமன்ற கொறடா சொல்படிதான் நடந்து கொள்வார்.
“நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பது எனக்குத் தெரியாது.
“(அப்படி கொண்டுவரப்பட்டால்) கட்சியின் பொறுப்பான உறுப்பினர் என்ற முறையில் கட்சி கொறடா சொல்வதுபோல் முடிவு செய்வேன்”, என முகைதின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சரியான samalippu. ஆனால் நடப்பது நிச்சயம் நடக்கும் என்கிறார் என் nanbar.
நல்ல நாடகம் நிறைவாக நடக்கிறது
புலி பதுங்குவது பாய்வதற்கான நேரத்திற்கு காத்திருக்கு. கட்சிக்குள்ள இருந்துக் கொண்டுதான் குழப்படி செய்ய முடியும். வெளியேறி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று மாமக்தீர் சொல்லிக் கொடுக்காமலா இருந்திருப்பார்.
இது புலி அல்ல நரி! ஏதாவது வெளிநாட்டுத் தூதர் பதவி கிடைத்தால் ஓடிவிடும்!