இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலை ஒரு லீட்டருக்கு 10 சென் குறைகிறது.
ரோன்95 இன் புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.05; ரோன்97 க்கு ரிம2.45. டீசலின் விலை ஒரு லீட்டருக்கு ரிம1.95 ஆகும்.
இப்புதிய விலை ஆகஸ்ட் 1 நள்ளிரவு 12.01 மணியிலிருந்து அமலுக்கு வருகிறது என்று மலேசிய பெட்ரோல் விற்பனையாளர்கள் மன்றத்தின் துணைத் தலைவர் ஸுல்கிப்லி மோக்தி தொடர்பு கொண்ட போது பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
நன்றி! ஆனால் இந்த மாதம் 10 காசு குறைவு அடுத்த மாதம் 20 காசு உயர்வு என்று மீண்டும் ஆரம்பித்து விடாதீர்கள்! மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்! இருந்தாலும் இந்த விலை குறைவினால் விலையேறிய பொருள்கள் எதுவும் விலை குறையப் போவதில்லை!