கோலாலும்பூரில் #TangkapNajib (நஜிப்பைக் கைதுசெய்) பேரணியை ஒடுக்குவதற்காக போலீசார் நிறைய குவிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 80 போலீசார் ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பிற்பகல் மணி 1.30க்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூட திட்டமிட்டிருக்கும் சோகோ விற்பனை மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
சோகோ மாலுக்கு எதிரில் மூன்று போலீஸ் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பேரணி நடந்தால் பேரணி ஏற்பாட்டாளர்களைக் கைது செய்யப்போவதாக கேஎல் போலீஸ் துணைத் தலைவர் லாவ் ஹொங் சூன் எச்சரித்திருப்பதாக பெர்னாமா கூறியது.
பேரணிக்கு முன்னதாக பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களான சமூக ஆர்வலர்கள் ஆதம் அட்லி அப்துல் ஹலிம், மந்திப் சிங், சுக்ரி அப்ட் ரஜாப் ஆகியோர் நேற்றே கைது செய்யப்பட்டனர்.
இன்னொரு சமூக ஆர்வலரான ஹிஷாமுடின் ரயிஸ் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
#TangkapNajib பேரணிக்கு ஏற்பாடு செய்திருப்பது டெமி மலேசியா அமைப்பு. ஊழல்களுக்காகவும் அதிகாரமீறல்களுக்காகவும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கைது செய்ய கோரிக்கை விடுப்பதற்காக இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கேஎல் போலீஸ் துணைத் தலைவர் லாவ் ஹொங் சூன் அவர்களே உங்களுக்கு தைரியம் இருந்தால் நமது நேர்மை தவறாத பிரதமர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்திய முன்னால் துணை பிரதமரை கைது செய்யுங்கள் ……. இல்லாதவர்களே .