கடனில் மூழ்கிக்கிடக்கும் 1எம்டிபியின் சொத்துகள் மீது காட்டாரும் சீனாவும் ஆர்வம் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நஜிப் கூறியதாக பெர்னாமாவின் சனிக்கிழமை செய்தி கூறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை காட்டாரின் அமிர் ஸீக் தாமின் பின் ஹாமாட் அல்-தானியும் பிரதமர் நஜிப்பும் சந்தித்தனர். அப்போது அமிர் 1எம்டிபியின் சொத்துகள் மீது ஆர்வம் காட்டியதாக நஜிப் கூறினார்.
அதோடு மட்டுமல்ல. மலேசியாவுக்கான சீனாவின் தூதரும் கூட அவரது நாட்டின் ஆர்வத்தை வெளியிட்டதாகவும் பிரதமர் நஜிப் தெரிவித்தார்.
ஆமாய்யா காசை கடன் வாங்கி எங்க போனுச்சுன்னு தெரியாது. அரசாங்க (பொது மக்களின்) நிலத்தை மலிவாக 1 எம் டி பி வாங்கி உண்மையான அல்லது சற்று அதிகமான விலைக்கு விற்று பெரிய வியாபாரம் பண்ணிவிட்டதாக நாடகம் ஆடுவதுதான் இவங்களது திட்டம். துப்பு கெட்டவனுங்களா இதை செய்வதற்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து ஆலோசகர் எல்லாம் நியமிக்க தேவை இல்லை. படிக்காத முட்டாளுக்கு கூட தெரியும். அதனால் தான் எல்லா முக்கியமான பதவிகளையும் இவனே கட்டு பாட்டுக்குள் வைத்திருக்கிறான்.
நாட்டையே வித்திரு.
முதல் கேள்வி அரசாங்கம் ஏண்டா வியாபாரத்துக்கு வரீங்க. அரசாங்கம், இருக்கிற வியாபாரங்கள் சிறப்பக இயங்க உதவி செய்யணும். ஆனால் நீயே இறங்குறதுக்கு காரணம், பணம் பணம் பணம். இதனாலே பல சிறு வணிகர்களும் வியாபாரிகளும் ஏன் பெரிய தனியார் நிறுவனக்கள் கூட போட்டித் தன்மையை இழக்கின்றன. இது நீண்டகலத்தில் பொருளாதார பாதிப்பை கொண்டுவரும். எல்லா அதிகாரத்தையும் ஓரிருவர் கையில் வைத்துக் கொண்டு நடத்திய ஆட்ச்சிய்ல்லாம் நாட்டை என்ன செய்ததது என்று உலக வரலாறுகள் சொல்லும். அம்னோ உர்ப்பினர்களே, மலாய்காரர்களே நிங்கள் எழவில்லை என்றால் இந்த நாடு……..
மக்களை கடனாளி. நிலம் சொத்துக்களையும் வெளி நாட்டவருக்கு விப்பனை!! நல்ல வியூகம்!!! இப்போது விலையேற்ற நெருக்கலில் மக்கள் அவதி!! அரசாங்கத்தின் திறமையோ திறமை!!!
ஆர்வம் காட்டும் சீனாவுடனும், காட்டார் உடனும் பேச்சுவார்த்தை நடத்த யாராவது மாரா கல்லூரி நிபுணர் கிடைப்பாரா பாருங்கள்!
எனக்கு தெரிந்த வரை நீயும் உன் பொஞ்சாதியும் அதை …….வலித்து எடுத்து விட்டதாக உலக பத்திரிகையில் வலம் வருதே எண்டா மொடமுலுங்கி நடிக்கிற சிவாஜியே தோதிடுவாண்டா
ஆஹா என்ன ஆச்சரியம், அமெரிக்க அபிரிக்கா,உகாண்டா,கொரியா நாடுகள் ஆர்வம் காட்டுகிறது என்று சொல்லுங்கள். இன்னும் எத்தனை நம்பிக்கையோ கடவுளுக்குதான் வெளிச்சம். இப்படி சொல்லியே ஜி எஸ் டி வசூல் செய்து மக்களை சிரமத்திற்கு தள்ளபட்டது.
நல்லா காட்டிக்கொண்டே இருங்கள் .
கடனில் மூழ்கி கிடக்கும் 1எம்டிபியின் சொத்துக்கள் மீதுதானே காட்டாரும் சீனாவும் ஆர்வம் கொண்டிருக்கின்றன, 1எம்டிபியின் நிறுவனத்தின் மீது அல்லவே, ஆகையால் 1எம்டிபியின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று லாபம் அடைய போகிறோம் என்று நஜிப் கூறுகிறாரோ ?