பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவை மாற்றங்கள் முடிந்து விட்டன என்பதால் அதை விட்டு முன்னே சென்று அதைவிட முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
“மக்களின் தேவைகளைக் கவனிக்க வேண்டும்”. பிரதமர் இன்று புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசினார்.
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின்மீதும் அவரின் ஆற்றலின்மீதும் நம்பிக்கை இருப்பதாக நஜிப் கூறினார்.
“எனக்கும் அமைச்சரவைக்கும் உதவும் அவரின் ஆற்றல்மீது எனக்கு நம்பிக்கை உண்டு. இருவருமாக சேர்ந்து ஒரு சிறந்த குழுவாக விளங்குவோம்”, என்றார்.
எதை எதை மூடி மறைக்க வேண்டும் என்பதைப் பாப்போம் என்று சொல்ல வருகின்றாரா என்ற டவுட் வருது!.
அடுத்த வேலை “MAU DUIT KAA” !!! “MAU DUIT KAA” !!! “MAU DUIT KAA” !!! என பிரதமர் முதல் அனைத்து அமைச்சர்களும் கூவ போகிறார்கள். ஆகஸ்ட் மாதமாயிற்றே ! கூவல்களுக்கு பஞ்சம் இருக்காது.
அடுத்த வேலை என்ன? வேறு என்ன கொள்ளை அடிக்கலாம் என்று சிந்திக்க தான்
இது நாள் வரை உங்கள் வேலையைத் தானே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்! இனி மேலாவது மக்கள் தேவைகளை அறிந்து பெட்ரோல் விலை எவ்வளவு ஏற்றலாம் என்று கணக்குப் பாருங்கள்!