பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த வார இறுதியில் கட்சியில் 3மில்லியன் உறுப்பினர்களின் ஆதரவு தமக்கிருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனாலும், கட்சியின் அடிநிலை உறுப்பினர்களில் சிலர் 1எம்டிபி குற்றச்சாட்டுகள்மீதான உண்மை தெரிய வேண்டும் என்கிறார்கள்.
“பிரதமர் அவருடைய கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் பணம் என்னவானது என்பதைப் பொதுமக்களுக்குச் சொல்லத்தான் வேண்டும்.
“பணம் எங்கே போனது. மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
“அதைத்தான் மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்”, என லெம்பா பந்தாய் அம்னோ உறுப்பினர் முகம்மட் நஜிப் அஹ்மட், 51, மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அத்தொகுதி கட்சித் தலைவரை ஆதரிப்பதாகக் கூறிய இன்னொரு உறுப்பினர் குற்றச்சாட்டுகள்தாம் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை என்றார்.
“அடிநிலை உறுப்பினர்கள் வலுவாகவே ஆதரிக்கிறார்கள்”, என மிமி ஜரியா ஹனாபி,52, கூறினார்.
“அடிநிலை உறுப்பினர்கள் அப்படித்தான் பிரதமர்மீது பாசமாக இருக்கிறார்கள்.
“ஆனால், மற்றவர்கள் பிரதமர் பொல்லாதவர் என்கிறார்கள். உண்மை என்னவென்பது எங்களுக்குத் தெரியவில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பாசமோ பாசம்! 47% பாசம்; 53% ?
அட நீங்க வேற !
2.6 பில்லியனை, 3 மில்லியன் UMNO உறுப்பினர்களுக்கு “BR1M” என பகிர்ந்து கொடுக்கப்பட்டால் தீர்ந்தது பிரச்னை !
பிறகென்ன மக்களை பார்த்து நஜிப் “எங்களுக்கும் காலம் வரும் ; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே” என்று பாடுவார்.
அமைச்சர்களோ நஜிப்புடன் கைகோர்த்து கோரஸாக “எங்கே போய்விடும் காலம் ; அது நம்மையும் வாழ வைக்கும்” என பாடி அடுத்த கையாடளுக்கு வழிதேடுவர்.
பணமென்றால் பிணமும் வாயைத் திறக்குமாம்!!! பிணமே அப்படியென்றால்>>>>>>>>>>>>>>>>????
நீ பாதி நான் பாதி இது என்னுடைய வழி.இதுதான் இப்பொழுது புதுமொழி.