முன்னாள் கெடா மந்திரி புசார் சனுசி ஜுனிட் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அமைச்சரவையை மட்டம் தட்டிப் பேசியுள்ளார்.
“யாரெல்லாம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைச் சாடிகிறார்களோ அவர்கள்தாம் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
“அந்த வகையில் இது 1எம்டிபி அமைச்சரவைபோல் காட்சியளிக்கிறது. 1எம்டிபி-யைத் தற்காக்கும் அமைச்சரவை. 1எம்டிபி-யை அம்பலப்படுத்தும் முயற்சிகளைப் பயனற்றவையாக்கவும் மூடிமறைப்பதற்குமான அமைச்சரவை”, என்றவர் யுடியூப் காணொளி ஒன்றில் கூறினார்.
“1MDB” அமைச்சரவை என்றால் என்ன அர்த்தம் ? கொள்ளைகார அமைச்சரவை என கூற வருகிறீர்களா ? மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து விட போகிறார்கள், ஜாக்கிரதை சனுசி ஜுனிட் !