ஷாபி அப்டாலின் செம்பூர்ணா அம்னோ தொகுதி அதன் ஆண்டுக் கூட்டத்துக்கு நஜிப் அப்துல் ரசாக்குக்கு விடுத்த அழைப்பை மீட்டுக்கொண்டு துணைத் தலைவர் முகைதின் யாசினை அழைத்துள்ளது.
ஆகஸ்ட் 15-இல் நடைபெறும் அத்தொகுதி ஆண்டுக் கூட்டத்துக்கு நஜிப் வந்தால் நிலவரம் கலவரமாகிடலாம் என்ற அச்சமே காரணமாகும்
பிரதமருமான நஜிப், 1எம்டிபி விவகாரத்தில் குறைகூறியதற்காக ஷாபியைப் புறநகர், புறநகர் மேம்பாட்டு அமைச்சிலிருந்து தூக்கியது அத்தொகுதியினருக்குப் பிடிக்கவில்லை.
செம்பூர்ணாவில் உள்ள அம்னோ அடிநிலை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன்பேரிலேயே நஜிப்புக்குப் பதிலாக முகைதின் அழைக்கப்படுவதாக ஷாபிக்கு அணுக்கமான வட்டாரமொன்று கூறிற்று.
“(நஜிப்பை) அழைத்தால் நிலைமை கட்டுமீறிச் சென்று விடலாம் என அஞ்சுகிறோம்”, என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
செம்பூர்ணா அம்னோ துணைத் தலைவர் நாசிர் சகரான், நஜிப் புறக்கணிக்கப்பட்டது குறித்து கருத்துரைக்க மறுத்தார்.
“நிலைமையை மோசமாக்க வேண்டாம் அதனால் நான் கருத்துரைக்க மாட்டேன்”, என்றாரவர்.
ஷாபியுடன் முகைதினும் 1எம்டிபி விவகாரத்தைக் குறைகூறியதற்காக துணைப் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.
ஜிப்பு நீ போடுற மாதிரியே குண்டு போடுறான் பாத்தியா. கலவரமாம் மண்ணாங்கட்டியாம்.