ஜோகூர் மந்திரி புசார் காலிட் நோர்டின், ஊழலைக் கண்டு அம்னோ வாயைப் பொத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருப்பது பலருக்கும் வியப்பளிக்கிறது. இவ்வளவுக்கும் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
“அம்னோவால், மலாய்க்காரர் போராட்டத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விசுவாசம் என்ற பெயரில் சில தரப்பினரைத் தற்காக்கக் கட்சி பயன்படுத்தப்படுவதைப் பார்த்துக்கொண்டு மெளனமாக இருக்க முடியாது.
“அம்னோ முன்னோக்கிச் செல்லவும் முனைப்புடன் செயல்படவும் அதன் செல்வாக்கை நிலைநாட்டவும் நேரம் வந்து விட்டது”, என்று அவர் முகநூலில் கூறியிருந்தார்.
ஊழல் ஒரு கலாச்சாரமாக மாறுவதையும் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு அம்னோ வாயைப் பொத்திக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் சொன்னார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாசிர் கூடாங் அம்னோ மகளிர் ஆண்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது தெரிவித்த கருத்துகள் அந்த முகநூல் பதிவில் இடம்பெற்றிருந்தன.
கடந்த 58 வருஷமா யாரும் உங்களை கேட்கலையே ,,,நீங்க யாரை கேட்க போறிங்க ,,,ஒபாமாவைய ????????
“ஊழல் ஒரு கலாச்சாரமாக மாறுவதையும் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு அம்னோ வாயைப் பொத்திக் கொண்டிருக்கக் கூடாது”
ஜோகூர் மாநிலம் அமீனோ கட்சியின் கையை விட்டுப் போய் விட்டது என்று இதற்கு அர்த்தம். மாநில மந்திரி பெசாரை பதவி இறங்க வைக்கவோ அல்லது விலகச் சொல்லவோ அமீனோ கட்சித் தலைவருக்கு இப்பொழுது போதிய தைரியம் இல்லை. இதை முடிவு செய்பவர் மாநில சமஸ்தானபதி என்பதாலும், அங்கிருந்து தைரியம் கொடுக்கப் பட்டதாலும் மந்திரி பெசார் இவ்வாறு கூறினாரோ?. ஜோகூர் மக்களுக்கு என்று புதிதாக ஒரு அரசியல் கட்சி ஏற்பட்டாலும் ஆச்சரியப் படுவதர்க்கு ஒன்றுமில்லை. ஜோகூர் வீழ்ந்தால் அமீனோ கட்சி தானாக வீழ்ந்து விடும் என்பதலில் எள்ளளவும் சந்தேகமில்லை எனலாம்.
ஹஹ ! ஊழலின் பிம்பமே அம்னோ. என்ன கதை சொல்றான்? 58 ஆண்டுகள் இதுதானே நடந்து கொண்டிருக்கிறது?
“UMNO” ஊழலை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் ஆனால் ஊழல் பண்ணி கொண்டிருப்போம், அந்த ஊழலுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க, அவர்களுக்கு லஞ்சமாக “BR1M” கொடுத்து கொண்டிருப்போம்.
“ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்த ஊழல் பெருச்சாளிகளே ஊழலை ஒழிப்போம்” என நகைச்சுவை பாண்ணாதீர்கள்.
நல்லா கோமடி பண்ணுங்கள் மக்களெல்லாம் மடையர்கள் என்ற என்னமோ ?