ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜோகூர் பாசிர் கூடாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தைத் தொடக்கி வைக்கிறார்.
தொகுதி உறுப்பினர்கள் அக்கூட்டத்தை அம்னோ எதிர்நோக்கும் பிரச்னைகளை எழுப்புவதற்கான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அம்னோ இளைஞர் உதவிச் செயலாளர் நூர் அஸ்லீன் அம்ப்ரோய்ஸ் கூறினார்.
“உறுப்பினர்களே கட்சியின் நாடி நரம்புகள். அடிநிலை உறுப்பினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது பேராளர்களின் பொறுப்பாகும்.
“அப்படிச் செய்வதால் எழுப்பப்படும் விவகாரங்களை எல்லாப் பேராளர்களும் குடும்பமாக இருந்து விவாதிக்க இயலும்”, என அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
பாசிர் கூடாங் ஜோகூர் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டினின் தொகுதியுமாகும்.
ஆனால் 1 MDB….. அதை மட்டும் கேட்க கூடாது.
கண் கட்டி வித்தை.
நாம் என்றுமே அம்னோ அடிமை .இதுதான் அவர்களின் திட்டம்
நன்கொடை கொடுத்த புன்னியவனை கொஞ்சம் காட்டுமையா…!
அல்தாந்துயா கொலையில் முந்திரி கொட்டைபோல் முந்தி கொண்டு எனக்கும் இக்கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று “புனித நூலின்” மீது சத்தியம் செய்து தன்னை சம்பந்தபடுத்தி கொண்ட நஜிப், நன்கொடையாக வந்த பணம் “1MDB”-யுடையது அல்ல என்று “புனித நூலின்” மீது சத்தியம் செய்யாதலால், இப்பணம் “1MDB”-யுடையதுதான் என மலேசிய மக்கள் மட்டுமல்ல உலகமே நம்புகிறது.
நல்ல நாடகம்மையா இந்த அமீநோகாரர்கள் செய்வது. பொது மக்கள் குற்றம் செய்தார்களோ இல்லையோ ஆனால் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை என்ற பெயரில் கொலை, திடீர் மரணம், தற்கொலை என்றெல்லாம் நாடகம் நடத்துவார்கள். ஆனால் இவர்களுடைய தலைவருக்கு முதலில் கேள்வி பதிலாம். அப்புறம்தான் விசாரணையாம். கதை கதையாம் காரணமாம்!. சிவாஜி கூட இவர்களைப் போல் நடிப்பதில் தோற்று விடுவார் போலிருக்கு.
கிடைத்த நன்கொடையில் எங்களுக்கும் கொஞ்சம் பகிர்ந்து கொடுக்க முடியுமா? அப்படின்னா நாங்க “அதைப்” பற்றி ஒன்னும் கேட்க மாட்டோம்! பாசிர் கூடாங் பக்கிர்பாஷா!
உண்மைக்கும் இந்த ஊழல் வாதிக்கும் பெரிய இடைவெளி — இவன் தற்காப்பு அமைச்சர் ஆக இருந்த பொழுது கொள்ளை அடித்து நிரப்பிய பணமே எத்தனையோ தலை முறைக்கு தாங்கும்– ஆசை யாரை விட்டது? அதிலும் கேட்க நாதி இல்லை என்றபோது.