சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரௌனை கைது செய்ய போலீஸ் கைது ஆணை பெற்றுள்ளது. அவர் பிரதமர் நஜிப்பை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தில் ஓர் அங்கமாகும் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.
அக்கைது ஆணை மலேசிய குற்றவியல் சட்டம் செக்சன் 124B மற்றும் செக்சன் 124Iஆகியவற்றின் கீழ் பெறப்பட்டுள்ளது.
மேலும், அவர் போலீசாரால் தேடப்படுகிறவர் என்று ஆசியானாபோல் பட்டியலிலும் இண்டர்போல் சிவப்பு அறிக்கையிலும் சேர்ப்பதற்குமான மனுக்களை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை போலீஸ் மேற்கொள்ளும் என்றும் இன்று மாலை சிஐடி இயக்குனர் விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
முடிந்தால் அம்னோ இல்லா யாவரையும் சிறையில் வைக்கவே இவன்களுக்கு ஆசை
கைது செய்தால் ,,, பிரிட்டிஷ் அரசாங்கம் இவனுங்கள மாலை போட்டு மரியாதை செய்யும் ,,,, கிளேர் ப்ரௌன்னுக்கு உறவாச்சே,,,,எப்படி
நீங்கள் என்ன எம்.ஜி.ஆர். ரா? நீங்கள் ஆணையிட்டால் அனைத்தும் நடந்துவிடுவதற்கு!
இந்நாட்டிற்குள் வந்ததற்க்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாத மங்கோலிய பெண் இந்நாட்டிலேதான் படுகொலை செய்யப்பட்டார் என்பதை உறுதிபடுத்தி விட்டு இக்கொலைக்கான காரணங்கள் என்னவென்று இதுவரை கூறாததால், உலகமே மலேசிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து நிற்கும் இவ்வேளையில், பிரிட்டன் அரசாங்கம் கிளேர் ரியுகாஸல் பிரௌனை மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமா என்பதே சந்தேகம்தான்.