மத்திய கிழக்குக் கொடையாளர் ரிம2.6 பில்லியனை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கின் சொந்தக் கணக்கில் போட்டு வைப்பதையே விரும்பினாராம். நஜிப்பே இதனைத் தெரிவித்ததாக முகைதின் யாசின் கூறினார்.
“எதற்காக அதை உங்கள் கணக்கில் போட்டீர்கள் என்று அவரிடம் (நஜிப்) கேட்டேன்? ‘கொடையாளர்தான் போடச் சொன்னார்’ என்றவர் பதிலளித்தார்”, என முகைதின் குறிப்பிட்டார்.
“அப்படி ஒருவர் சொல்லும்போது நம்பத்தானே வேண்டும்”, என்றாரவர்.
துணைப் பிரதமர் பதவியிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்ட முகைதின், வால் ஸ்திரிட் ஜர்னல் அம்பலப்படுத்திய பிறகுதான் ரிம2.6பில்லியன் பற்றிய விவகாரம் தமக்குத் தெரிய வந்ததாகக் கூறினார்.
இன்று ஜோகூரில் பாகோ அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளின் ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது அம்னோ துணைத் தலைவர் இவ்வாறு கூறினார்.
விபரிதம் ஆரம்பிக்கும்போது மௌனம் இருந்து விட்டு, உன்னை தள்ளி வைக்கபோகிறார் என்று தெரிண்டுக்கொண்டப்பிறகு விளிம்பில் வாய் திறந்தது ஏனோ ? பதவி பறிபோகுது என்ற ஆதங்கம் ?நீங்கள் மட்டும் என்ன நேர்மையானவர? பல கோடி கொடுத்தது கல்வி முறையை உங்கள் இனத்திற்காக மாற்றி அமைத்து, படிக்காத,படிக்கதெரியாத உங்கள் இனத்தை துக்கிவிடவில்லையா ?
நாங்கள் நன்கு படித்தும் உயர் நிலை பள்ளிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு மறுக்கப்படுவது உங்களுக்கு தெரியும்தானே ? உங்கள் இனத்தை மாற்ற இயலாது இறைவனை தவிர, எங்களில் மன வேதனை தங்கள் விடாது .
என்னடா கதை இது? இதற்க்கு எல்லாம் முடிவே இல்லையா? பொய்யும் பித்தலாட்டமும் -காது புளித்து விட்டது.
மத்திய வங்கி இந்த பணத்தைப்பற்றி இன்னும் ஒண்ணுமே சொல்லவில்லையே?? எப்போது நுழைந்தது?, மத்திய வங்கிக்கு தெரியப் படுத்தப்பட்டதா?? இப்பணம் எவ்வழியில் செலவழிக்கப்பட்டது??, வங்கிக் கணக்கை மூடும் வேளையில் மீதப் பணம் ஏதும் இருந்ததா?? இருந்திருந்தால் அப்பணம் என்னவானது? மத்திய வங்கியின் பதிலுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்!!!
அப்படிச் சொன்னதாக இப்பொழுது கடிதம் எல்லாம் தயாராகி விட்டது. கொடுக்க வேண்டிய இடத்திலும் கொடுத்து விட்டாகி விட்டது. அதனால் ஊழல் இல்லை. மேல் நடவடிக்கையும் தேவை இல்லை. இதுதான் நமக்குக் கிடைக்கப் போகும் அடுத்த தகவல்.
பிரதமர்,அவர் எதிரிகளை அடையாளம் காண இது ஒரு யுக்தி என உன்னை போன்றோர்கள் மண்டைக்கு ஏறாது. தற்போது அந்த கூட்டங்களை எளிதாக கண்டுக்கொண்டார்,அதில் உனக்கு முதலிடம் கொடுத்ததை நீ பெருமை கொள்ளவேண்டும்..
உன் முதலாளி காக்கா அவர்கள் இப்போதெல்லாம் மிகவும் அடக்கி வாசிக்கிறார்! காரணம் புரியவில்லையா உனக்கு?
அன்று வாய் மூடிவிட்டு இன்று கொக்கரிப்பது சுயநலம்தானே தேங்காய்முடின் ?உனக்கு கொஞ்சம் கிடைத்திருந்தால் இப்படி கொக்கரிப்பு வருமா?இண்டர்லோக் உன்னுடைய வஞ்சகம் எல்லோரும் அறிவர்.
போடா ………………… kita dengar அப்படிதானே சொன்னே இப்பவும் நஜிப் சொல்வதை நீ dengar பண்ணிக்கோடா முண்டம் . நீயும் தான் திருட்டு …………! இன்னா உனக்கு கொடுக்காம தின்னுட்டான் அதான் பொறாமை . உனக்கு கொஞ்சம் கொடுத்திருந்தா என்னமோ உத்தமனா பேசற . நீங்க எல்லோரும் திருட்டு ………..தான் டா
மலேசிய வருமானத்துறை ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை? 2013ல வரவு என்றால் 2014ம் ஆண்டு கணக்கு சமரப்பித்திருக்க வேண்டுமே.
எது எப்படியோ… சொந்த கணக்கில் பணம் போடுவது லஞ்சம் தானே ..
இதுவரை தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு உரிமையாளர் இதைப்பற்றி வாயைத் திறக்கவே இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் (பொதுவில்) மக்களிடம் இதைப்பற்றி தெளிவாக விளக்கவும் இல்லை. இதனிடையே முந்திரிக்கொட்டையாய் அம்னோ அமைச்சர்களும் தளபதிகளும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு மக்களை நம்ப வைக்க போராடுகின்றனர்!!!
இந்த விவகாரம் நாற்றமடிக்குது ஆனாலும் ஆட்சியில் அதிகாரத்திலும் உள்ளவர்களுக்கு அது வாசனை போல் இருக்கும் போல் இருக்கிறது. இவன்கள் தான் மக்களுக்கு அறிவுரை கூறுகின்றவர்கள்– நியாயம் நீதி உண்மை ஒழுங்கு சமத்துவம் இன்னும் மற்றவை பற்றியும் பெரிய பேச்சு பேசி நம்மை எல்லாரையும் முட்டாள்களாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறான்கள். இது தான் உண்மையான ஊழல் இல்லாத ஆட்சி- நாம் இன்னும் தூங்கி கொண்டிருந்தால்
donation = நல்லா கொட