‘ஒரு அம்னோ தலைவர் கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்’

pagoh dவெளியில்  செல்ல  வேண்டிய  அம்னோ  தலைவர்  ஒருவர் கட்சியைக்  குழிதோண்டிப் புதைப்பதில்  முனைப்பாக இருக்கிறார்  என்று  ஜோகூர்  அம்னோ தலைவர்  ஒருவர்  வருத்தத்துடன்  குறிப்பிட்டார்.

“அவரின்  தந்தையும்  தாயாரும்  கட்சிக்காகப்  போராடியவர்கள் ஆனால், இந்தத்  தலைவரோ  அம்னோவை  அழிக்கப்  பார்க்கிறார்.

“இந்தத்  தலைவர்  விடுப்பில்  செல்ல  வேண்டும்,  பதவி  இறங்க  வேண்டும். நம்  பாட்டன்மார்கள்  கட்டிக்காத்த  கட்சி  அழிவதைக்  காண  நாம்  விரும்பவில்லை”, என  பாகோ  அம்னோ  தொகுதித்  துணைத்  தலைவர்  இஸ்மாயில்  முகம்மட்  கூறினார்.

தொகுதியின்  ஆண்டுக்  கூட்டத்தில்  பேசிய  அவர்,  அடிநிலை  உறுப்பினர்கள்  அம்னோ  சிதையுறுவதைப்  பார்த்துக்  கொண்டிருக்க  மாட்டார்கள்  என்பதை  அந்தத்  தலைவர்  உணர  வேண்டும்   என்றார்.