மாட் சாபு: அம்னோவை ஆதரிப்போருக்கு ஜிஎச்பி-இல் இடமில்லை

befrகெராக்கான்  ஹராபான்  பாரு(ஜிஎச்பி)  அதன்  உறுப்பினர்கள்   பகைக் கட்சியான  அம்னோவுடன்  நட்புகொள்வதையோ அதற்கு  ஆதரவு  அளிப்பதையோ  பொறுத்துக்கொள்ளாது. ஜிஎப்பி-இன்  இடைக்கால  நிர்வாகக்  குழுத் தலைவர் மாட்  சாபு  இவ்வாறு  தெரிவித்தார்.

“அம்னோவுடன்  உறவு  பாராட்டுவோர்  வெளியில்  செல்ல  வேண்டியதுதான்”, என  நேற்றிரவு  செபராங்  பிறையில்  ஹரி  ராயா விருந்து  ஒன்றில்  பேசியபோது  மாட்  சாபு  கூறினார்.