வார இறுதியில் நடைபெறவுள்ள அதன் ஆண்டுக் கூட்டத்துக்கு அம்னோ தலைவர் நஜிப்புக்கு விடுத்திருந்த அழைப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அம்னோ செம்பூர்ணா, கூட்டத்தை முகைதின் யாசின் தொடக்கி வைப்பதை விரும்புகிறதாம்.
அம்னோ செம்பூர்ணா அடிநிலை உறுப்பினர்கள், அம்னோவை எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றி கட்சித் துணைத் தலைவர் முகைதினும் உதவித் தலைவர் ஷாபி அப்டாலும் தங்கள் தொகுதித் தலைவரும் விளக்கமளிப்பதைக் கேட்க விரும்புகிறார்கள் என அதற்கு அணுக்கமான வட்டாரமொன்று கூறிற்று.