பெர்சே 4 கண்டனப் பேரணியின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 29-இல் இரவுமுழுக்க டட்டாரான் மெர்டேகாவில் தங்கி இருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பேரணியில் கலந்துகொள்வோர் இரவில் தங்குவதற்கு வசதியாக தூங்கும் பைகள், துணி விரிப்புகள், கூடாரங்கள் போன்றவற்றைக் கொண்டுவருமாறு பெர்சே இயக்கக் குழு ஒர் அறிக்கையில் கேட்டுக்கொண்டது.
“பேரணியில் கலந்துகொள்வோருக்காக குடிமைக் கல்விப் பட்டறைகள், பொது விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக நடவடிக்கைகள், சமூகத் தலைவர்களின் உரைகள் எனப் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன”, என்றது கூறிற்று.