கெடா அம்னோ இளைஞர் தலைவர் சைபுல் ஹஸிஸி சைனல் அபிடின், லங்காவி அம்னோ மகளிர் கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைகூறியது அதிக பிரசங்கித்தனமானது என்றார்.
தொகுதித் தலைவர் கூட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் பேராளர்கள் விருப்பம்போல் நடந்துகொள்ளும் நிலை உருவானது என்றவர் வருத்தப்பட்டார்.
“கட்சித் தலைவரின் செயல் பிடிக்கவில்லை என்றால்கூட அதைப் பொதுமேடையில் சொல்லி அவரை அவமதித்திருக்கக் கூடாது.
“லங்காவி அம்னோ மகளிர் தொகுதித் தலைவர் நடவடிக்கை எடுத்துக் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து அது ஆத்திரத்தைக் கொட்டுமிடமாக மாறுவதைத் தடுத்திருக்க வேண்டும்”, என்றவர் நேற்றிரவு மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
உண்மை எப்பொழுதும் கசக்கும் .
நானே இராஜா, நானே மந்திரி என்ற கதையாகிப் போச்சு அமீனோ கட்சியின் நிலைமை.
அதிக அசிங்கத்தனமானது இல்லையே! அது வரை பாராட்டுக்கள்!
ஜனநாயகம் உள்ள நாடக மாறவேண்டும் .
இதுதான் உண்மை யான பேசிய அம்னோ பெண்மணியை பரடுகிறான்
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்பது அம்னோவை பொறுத்தவரை மெய்ப்பிக்க பட்டு விட்டது.
அன்று அம்னோ போதுபேரவையில் ஒருவர் “KRIS”-சை கையில் பிடித்து கொண்டு கையை உயர்த்தி, மற்ற இனத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டபோது, அதை ரசித்து கைகொட்டிய அம்னோ தலைவர்கள், இன்று லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினரின் பேச்சு அதிக பிரசங்கித்தனமானது என்று கூறுவதுதான் அதிக பிரசங்கித்தனமானது.
உண்மையை மறைக்காமல் பேசிய அந்த பெண்மணிக்கு என் நன்றிகள்.