ரிம2.6பில்லியன் விசாரணைக்கு அரச விசாரணை ஆணையம் அமைக்க அகோங்கிடம் ஜிஎச்பி வேண்டுகோள்

 

RCIAgongகெராக்கான் ஹரப்பான் பாரு (ஜிஎச்பி) பிரதமர் நஜிப் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரிம2.6பில்லியன் போட்டிருப்பது குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை இன்று பேரரசரிடம் தாக்கல் செய்தது.

ஜிஎச்பியின் இளைஞர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முகமட் சானி ஹம்சான் தலைமையில் ஒரு குழு அதன் கோரிக்கையை தாக்கல் செய்ய இஸ்தானா நெகாரவுக்கு இன்று பின்னேரத்தில் சென்றது. இஸ்தானா பிரதிநிதி அவர்களிடமிருந்து கோரிக்கை  மனுவைப் பெற்றுக்கொண்டார்.

RCIAgong1தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி இந்த விவகாரத்தில் அரச விசாரணை ஆணையம் மிக முக்கியமானது ஏனென்றால் இதில் பிரதமரின் நேர்மை சம்பந்தப்பட்டுள்ளது.

இந்த மனுவில் முகமட் சானி கையொப்பமிட்டுள்ளார். அரச ஆணைய உறுப்பினர்களாக நியமிக்க முன்னாள் தலைமை நீதிபதிகளான சாலே அப்பாஸ் மற்றும் அப்துல் ஹமிட் முகம்மட் ஆகியோரின் பெயர்களையும் சானி முன்ழொழிந்துள்ளார்.

மேலும், சுல்தான்கள் மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டை கூட்டி இவ்விவகாரத்தை விவாதித்து அதன் பின்னர் நஜிப் விடுப்பில் செல்ல ஆலோசனை கூற வேண்டும் என்றும் சானி வேண்டிக்கொண்டுள்ளார்.