புதிய பிஎசி உறுப்பினர்களை நியமிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இல்லை

 

nospecialsittingநாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவில் காலியாக இருக்கும் நான்கு இடங்களை நிரப்புவதற்கு ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படாது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மாறாக, அந்நடவடிக்கை எதிர்வரும் அக்டோபர் 19 இல் தொடங்கும் வழக்கமான நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அஸாலினா ஓத்மான் கூறினார்.

இம்முடிவு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அஸாலினா தெரிவித்தார்.