தடையை நிறுத்திவைக்கும் எட்ஜின் முயற்சி தோல்வி

geதி  எட்ஜ்  நிதியியல்  நாளேட்டையும்  தி  எட்ஜ்  வார  இதழையும்  ஜூலை  27 தொடங்கி  மூன்று  மாதங்களுக்கு  இடைநீக்கம்  செய்யும்  அரசாங்கத்தின்  முடிவு  நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்தச்  செய்திதாள்கள், தங்களின் நீதிமுறை மேலாய்வின்  முடிவு  தெரியும்வரை  இடைநீக்க  உத்தரவை நிறுத்திவைக்க  வேண்டும்  என்று செய்திருந்த மனுவை கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம் நிராகரித்தது.

மனுவை  நிராகரித்த  நீதிபதி  அஸ்மாபி,  உத்தரவை  நிறுத்தி வைக்காததால்  பெரிய  இழப்புகள்  ஏற்பட்டு விடாது  என்றும்  அப்படியே  இழப்புகள்  ஏற்படினும்  அச்செய்திதாள்களின் நீதிமுறை மேலாய்வு  ஏற்றுக்கொள்ளப்படும்  நிலையில்  அவற்றின்  இழப்புகள்  ஈடு  செய்யப்படும்  என்றார்.

தி எட்ஜ்  கம்முனிகேசன்  சென். பெர்ஹாட்  செய்துள்ள நீதிமுறை மேலாய்வு செப்டம்பர்  7-இல்  விசாரணைக்கு  வருகிறது.