பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பாரிசான் நேசனலின் 13 பங்காளிக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைப் பெற்றிருக்கிறார்.
இன்று புத்ரா ஜெயாவில் பிஎன் தலைவருமான நஜிப்புக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான பார்டி ரக்யாட் சரவாக் கட்சித் தலைவர் ஜேம்ஸ் மாசிங் இவ்வாறு கூறினார்.
“எல்லாக் கட்சித் தலைவர்களும் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர்”, என அந்த சரவாக் அமைச்சர் சொன்னார்.
“அவரது தலைமையில் முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தோம்”, என்றாரவர்.
அக்கூட்டத்தில் 1எம்டிபி பற்றியோ நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றி விடப்பட்டதாகக் கூறப்படும் ரிம ரிம2.6 பில்லியன் “அரசியல் கொடை” பற்றியோ எவரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் மாஸிங் கூறினார்.
நீங்கள் அறிவுகெட்ட பங்காளி கட்சிகள் என எங்களுக்கும் உறுதியாக தெரிகின்றது ..
“அவரது தலைமையில் முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தோம்”. உங்க தலை மேல பெரிய பாறங்கல்லைத் தூக்கிப் போடப் போறானுங்க. பார்த்து சரவாக்கை சென்று அடையுங்கள்.
உண்மைதான், தற்போது உள்ள பிரச்சனை பற்றி பேசியிருந்தால் பதவி பறிபோகும் என்பது அனைவருக்கும் தெரியும். யார் எப்படி போனால் என்ன ? பதவி முக்கியம், அதனால் நான் பெரும் சுகபோகங்கள் எனக்கும்,எனது குடும்பதினருக்கும் போதும் என இருக்கும்போது, எவன் வாயை திறந்து உண்மையை பேசுவான் ?
ஆம் மரமண்டயர்கலான பங்காளி கட்சிகள் நீங்களும் கூட்டு சேர்ந்து ,நம் பொன்விளையும் நாட்டை கூருபோட்டு விற்று விடுங்கள் .
மொத்த தருத்திரமும் ஒன்று சேர்ந்து மறுபடியும் முதலில் இருந்தா ? விளங்கிடும் நாடு !
“நஜிப்புக்கு உறுதுணையாக இருப்போம் பிஎன் தலைவர்கள் உறுதி”
நஜிப் : DEMOKRASI ! DEMOKRASI ! DEMOKRASI !
பங்காளி கட்சிகள் 13-ம் ஒருமித்த குரலில் : DERMA KASI ! DERMA KASI ! DERMA KASI !
பங்காளி கட்சிகள் ஆமாம் சாமி போடத்தான் லாயக்கு . இல்லையேல் பதவிக்கு ஆப்பு வந்திருமே !
அரசியல் தலைவர்கள், அவரவர் குடும்ப சுகத்துக்காக, காரியத்தில் கண்ணுங் கருத்துமாகவே உள்ளனர்!!! மக்கள்தான், இவர்களை மக்கள் தலைவன் என்று கூஜா தூக்கிவிட்டு சொந்த நலனில் மண்ணை வாரிப் போட்டுக் கொல்/ கொள்கின்றனர்!!!
இவர்களின் உள்நாட்டு ..வெளிநாட்டு ..வங்கி கணக்குகளை ஆராய்ந்தால் ..இந்த ஆதரவின் ரகசியம் தெரியும்
இதில் என்ன ஆச்சரியம்? எல்லாருமே ஊழல்வாதிகள் தானே? என்னமோ பெரி ஒழுங்கு போல் பேசும் ஈன ஜென்மங்கள்– எல்லாம் பிரத்மனின் எலும்பு துண்டுக்காக தான். துப்பு கெட்ட கம்மனாட்டிகள்–பக்கத்து சிங்கபூரை பார்த்தாவது திருந்த கூடாதா?
நஜிப் மேலும் மேலும் கொள்ளையடிக்க உறுதுணையாக இருப்பார்கள் என்று உறுதியாக கூறுகின்றனர்,(எதைத்தின்று வாழும் ஜென்மங்கள் என்று தெரியவில்லை)
ஒவ்வொரு உறுதி மொழிக்கும் எத்தனை மில்லியன் வெள்ளி அவர்-அவர் சொந்த கணக்கில் உள்ளதோ கடவுள் அறிவார். நாட்டை குழியில் தள்ளிய நம் நம்பிக்கை “Nayagun” வாழ்க .
ஆமாம் ஆமாம் அதரவு தந்தால்தானே பணம் பட்டம் பதவி கிடைக்கும்.மக்கள் எப்பெடி இருந்தா எனக்கு என்ன.இதுதான் உங்கள் தத்துவம்.
உறுதுணையாய் இரு அப்பத்தான் அவன் எடுத்த பிச்சையிலே உனக்கும் போடுவான். நீயும் உன் குடும்பமும் மானங்கெட்டு அதே வாங்கி தின்னுவீங்கே.
260 கோடியைப் பற்றி ஒன்றுமே பேசவில்லை! அப்புறம் முழு நம்பிக்கை எப்படி வந்தது?
உங்களுடைய உறுதிமொழி ஏன் தேவைபட்டது என்று குட்டு வெளியாயிடுச்சு அல்லவா!. அமீனோ கட்சியே பிரதமருக்கு ஆப்பு வைக்கின்றது என்று தெரிந்த உடனே பங்காளிகளின் பக்கபலம் வேண்டும் என்று ஒரு கூட்டம்!. இதில் பழனியின் ஓட்டும் மூஹிடினுக்குதான். நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றம் கூட்டாமலேயே பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமான கையெழுத்துடன் மாமன்னரைக் கண்டு கொடுக்கப் பட்டால் பிரதமர் மாமன்னரால் நீக்கப் பட்டு மொஹியிடன் பிரதமர் பதவி ஏற்கக் கூடும். இந்நிலையில் சஹிட்டுக்கும் ஆப்பு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க மாமக்தீர் கூட்டணி வேலை செய்கின்றது. இதன் வெளிச்சம் அமீனோ கட்சியின் இளைஞர் தலைவர் ஒரு சில நாட்களாக விடும் அறிக்கையில் இருந்து தெள்ளத் தெளிவாக தெரியுது. அதற்கு சப்பைக் கட்டுவது போல் காடிர் கைரியைத் தூண்ட வெளிப்படையாகவே அமீனோ கட்சியின் மாற்று கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தது மேலும் படம் போட்டுக் காண்பித்து விட்டது. பேராக் மாநில வரலாறு மீண்டும் அரங்கேற்றப் படும். நம்பிக்கை நாயகன் தான் செய்த வினைப் பயனை உடனுக்குடனேயே அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
தேனீ, இப்போதைய நிலையை தெளிவாகச் சொன்னீர்!!! உண்மை ஜனநாயகம் மலர நல்லது நடக்கட்டும்!!! ஏழை மக்களை மென்மேலும் வேதனை பள்ளத்தில் தள்ளிய அராஜகர்கள் இருக்கும்வரை ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் கண்ணீர் கதையே!!! மக்கள் வேதனையில் குளிர் காயும் குள்ளநரிகளே அதிகரிப்பர்!!!! சிந்திப்போம் செயல் படுவோம்!!!