பிரதமர் நஜிப் 1எம்டிபி மக்கள் பணத்தை பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்த கருத்தை அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் ஏற்றுக்கொள்ளவில்லை. அது தவறு என்கிறார்.
தாம் பிரதமர் குறைகூறவில்லை, வெறும் கருத்து மட்டும் தெரிவிப்பதாக முத்தாய்ப்பு வைத்து கவனமாக பேசிய முகைதின், அந்நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் பெறப்பட கடன்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. அரசாங்கம் வரிகட்டுவோரின் பணத்தைக் கொண்டு இயங்கிறது என்று முகைதின் கூறினார்.
“1எம்டிபி பற்றி ஏன் சத்தம் போடுகிறீர்? அது மக்கள் பணத்தை பயன்படுத்தவில்லை (என்று பிரதமர் கூறினார்).
“முதலில், ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நான் கருத்து மட்டும் கூறுகிறேன், குறைகூறவில்லை (பிரதமரை).
“கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் வரிகட்டுவோரின் பணம் பயன்படுத்தப்படவில்லை என்று அவர் (பிரதமர்) கூறினார்.
“அது உண்மை. ஆனால், அந்த பில்லியன்கள் வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்டவை. இறுதியில் அந்தக் கடனின் ஒவ்வொரு சென்னையும் சுமக்க வேண்டியது யார்?, என்று முகைதின் கேட்டார். அதற்கு அங்கு கூடியிருந்தவர்கள், “ராக்யாட்” (மக்கள்) என்று முழக்கமிட்டனர்.
“செம்போர்னா மக்கள் புத்திசாலிகள்” என்று முகைதின் பதிலளித்த போது 2,000க்கு மேற்பட்ட சாபா தொகுதி செம்போர்னா அம்னோ உறுப்பினர்களின் ஆண்டு பொதுக்கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
செம்போர்னா அம்னோ தொகுதியின் தலைவர் ஷாப்பி அப்டால். அவரும் 1எம்டிபி விவகாரத்தில் தமது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
முகைதின் யாசினும் ஷாப்பி அப்டாலும் ஜாலை 28 இல் அவர்களின் பதவிகளிலிருந்து பிரதமர் நஜிப்பால் அகற்றப்பட்டனர்.
நீ பதவியில் இருக்கும் பொழுது வாய் மூடி இப்பொழுது மக்கள் பணம் என்று சொல்லி நல்லவனாக நடிக்காதே முகமூடிடின்.உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருந்தால் வெளிபடையாக நீதிமன்றம் செல்.இல்லேயேல் வாய் மூடி மௌனமாக இல்லத்தில் இரு.