நஜிப்பின் ரிம2.6 பில்லியனுக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்புண்டு: மகாதிர் உறுதி

drபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்த  வங்கிக் கணக்கில் போடப்பட்ட  ரிம2.6 பில்லியனுக்கும்  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  முதலீட்டு  நிறுவனமான  1எம்டிபி-க்கும்  தொடர்பு  உண்டு  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  உறுதியாக  நம்புகிறார்.

அப்பணத்துக்கும்  1எம்டிபிக்கும்  சம்பந்தமில்லை  அது  ஒரு  நன்கொடை  என்று  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்திருந்தும்கூட மகாதிர்  அதை  நம்பவில்லை.

“அதற்கும்  1எம்டிபிக்கும்  தொடர்புண்டு  என்றே  நினைக்கிறேன்”, என்று  பினான்சியல்  டைம்சுக்கு  வழங்கிய  நேர்காணலில்   மகாதிர்  கூறினார்.

“அது  ஒரு  நன்கொடை  என்பதை  நம்பவில்லை. அராபியரோ  வேறு  எவருமோ  அவ்வளவு  பெரிய  தொகையை  எவரும்  கொடுப்பார்கள்  என  நான்  நினைக்கவில்லை”, என்றவர்  கூறினார்.

முடிவில்  நஜிப்  பதவி  விலக  வேண்டிய  கட்டாயத்துக்கு  ஆளாவார்  என்றும்  மகாதிர்  அந்நேர்காணலில்  கூறினார்.