தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே, டட்டாரான் மெர்டேகாவில் பெர்சே 4 பேரணி நடத்தப்படவில்லை என்பதால் அதன் உரிமையாளரின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளது.
இதை கோலாலும்பூர் மாநகர் மன்றத்திடமும் (டிபிகேஎல்) தெளிவுபடுத்தியிருப்பதாக பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார்.
“நாங்கள் டட்டாரான் மெர்டேகாவுக்குள் நுழையப் போவதில்லை. அதனால் அனுமதி பெற வேண்டியதில்லை. இதைத் தெளிவுபடுத்தி விட்டோம்”, என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் மரியா கூறினார்.
முன்னதாக, டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சைனோல் சமா, பெர்சே 4 பேரணியை டட்டாரான் மெர்டேகாவில் நடத்த டிபிகேஎல்லின் அனுமதி பெறப்படவில்லை என்றும் அதனால் அங்கு அதை நடத்துவது சட்டவிரோதமாகும் என்றும் சொல்லியிருந்தார்.
1MDB ஊழல்களை மறைப்பதற்கு பூமியிலிருந்து ஆகாயம்வரை சொல்லொன்னா பொய்களை கொட்டித்தீர்த்தது போல, பெர்சே பேரணியை தடுக்க உள்துறை [ஊழல்துறை] அமைச்சர்கள் முதல் டிபிகேஎல் ஊழியர்வரை பித்தம் தலைக்கேறி செய்வதறியாமல் பிதற்றுகிறார்கள். பெர்சே பேரணியில் கலந்து கொள்ள தவறாதீர்கள்.
அவன் கடக்காரங்க ஏழை மக்களை ஏமாத்தி திருடி பொழைக்கும் நாய்கள் . நாம்ப போராட்டம் ஓயாது . இதுதான் பெர்சிஹ் நாட்டையே சுத்தம் பண்ண வேண்டும் ………..