அண்டை நாடான இந்தோனேசியாவில் காடுகள் எரிக்கப்படுவதால் மலேசியத் தலைநகரமும் தீவகற்பத்தின் பல பகுதிகளும் புகைமூட்டத்தில் மூழ்கிக் கிடப்பதாக சுற்றுசூழல், வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
புகைமூட்டம், செப்டம்பர் நடுப்பகுதியில் மொன்சூன் பருவ நிலை முடிவுக்கு வரும் வரையில் நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை பேச்சாளர் ஹிஷாம் அனிப் கூறினார்.
இந்தோனேசியாவில் தோட்டங்களும் காடுகளும் எரிவதால் உண்டாகும் புகை மண்டலத்தைக் காற்று மலேசியா பக்கமாக அடித்துக் கொண்டு வருகிறது என்றாரவர்.
ஆகக் கடைசி நிலவரத்தின்படி சுமத்ராவில் 25 இடங்களிலும் களிமந்தானில் 94 இடங்களிலும் காடுகள் எரிகின்றன.
மலேசிய இயற்கைவள, சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி ஜாபார், காடுகள் எரிக்கப்படுவதை நிறுத்த இந்தோனேசியா உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தோனிசிய சக அமைச்சரைச் சந்தித்து இப்பிரச்னை பற்றிப் பேசப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
புகை மூட்டதை விட நம் அரசியல் நாற்றம் தான் தாங்க முடியவில்லை .