மக்களோ நாடாளுமன்றமோ விரைவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளியேற்றும் என்பது நடவாத காரியம் என்கிறார் நியு ஸ்ரேய்ட்ஸ் முன்னாள் தலைமை செய்தியாசிரியர் ஏ. காடிர் ஜாசின்.
வார இறுதியில் நடக்கும் பெர்சே பேரணிக்கு எவ்வளவுதான் மக்கள் ஆதரவு தந்தாலும் அது நடக்காது.
“நஜிப்பைக் கவிழ்ப்பதுதான் பெர்சே-இன் நோக்கம் என்றால் அது நடக்காது. ஆர்ப்பாட்டங்களால், தெருவில் கண்டக் கூட்டங்களால் நஜிப் மாறப்போவதில்லை. பட்ட பகலில் வியர்வை சொட்டச் சொட்ட நின்று கொண்டு கண்டனம் தெரிவித்தால்கூட அவர் பதவி விலக மாட்டார்”. நேற்றிரவு மலேசியாகினி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டபோது காடிர் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த போதுமான ஆதரவைத் திரட்டுவதும் கடினமாகும்.
“எனவே, பெர்சேயால் அல்லது பெர்சேக்குப் பிறகு அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை”, என்றாரவர்.
வெளியேற்ற முடியாவிட்டாலும் உலக நாடுகளுக்கு புரியும் மக்கள் இவர் மேல் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று .
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!!! மக்கள் நினைத்தால் ஆகாதது ஒன்றுமில்லை!!!!