சரவாக் ரிபோர்ட் ஆசிரியர்: மலேசிய போலீசாரின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது

 

interpolnoசரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரவுனுக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ் பெறுவதற்கு மலேசிய போலீஸ் விடுத்திருந்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்துள்ளது.

சிவப்பு நோட்டீஸ் என்பது அனைத்துலக கைது ஆணைக்கு ஒப்பானது. இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டால் இன்டர்போலின் 190 உறுப்பிய நாடுகளுக்கும் ஒரு தனிப்பட்ட நபர் திருப்பி அனுப்பப்படுவதற்காக தேடப்படுகிறார் என்று தெரிவிக்கப்படும்.

Fair Trials International என்ற பிரிட்டீஷ் அரசு சார்பற்ற அமைப்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இன்டர்போலின் தலைமைச் செயலாளர் ஜர்கென் ஸ்டோக் மலேசியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரான கிளேர் ரியுகாஸல் பிரவுன் 1எம்டிபி விவகாரம் மற்றும் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்கில் பல பில்லியன் ரிங்கிட் போடப்பட்டது போன்றவற்றை அம்பலப்படுத்தியவர்.