அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் பெர்சே பேரணியில் கலந்துகொள்ளப்போவதில்லை என அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் அறிவித்துள்ளார்.
முகைதின் பேரணிக்குச் செல்வார் எனச் சமூக வலைத்தளங்களில் வந்துள்ள செய்தி பொய்யானது, தீய நோக்கம் கொண்டது என்று முகம்மட் நர்டின் ஆவாங் கூறினார்.
“பொறுப்பற்றவர்கள் அப்படி ஒரு செய்தியைப் பரப்பி வருகிறார்கள்”, என்றாரவர்.
இவ்வாரத் தொடக்கத்தில் கெராக்கான் ஹராபான் பாரு கோலாலும்பூரில் உள்ள முகைதின் இல்லம் சென்று பெர்சே 4 பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு கொடுத்தது.