கடந்த இரண்டு நாள்களாக கோலாலும்பூரில் ஆயிரக்கணக்கானவர் திரண்டு தம்மைப் பதவிவிலக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் நெருக்குதலுக்குப் பணியப்போவதில்லை எனச் சூளுரைத்துள்ளார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் மெர்டேகா உரை நிகழ்த்திய பிரதமர் தம் புதிய அமைச்சரவையும் பிஎன்னும் மலேசியாவைத் தொடர்ந்து முன்னுக்குக் கொண்டு செல்லப் பாடுபடும் என்றார்.
13வது பொதுத் தேர்தலில் மக்கள் அதற்கான அதிகாரத்தைத் தங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றாரவர்.
“ஒன்றைத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன்…… பாய் விரித்து நங்கூரம் உயர்த்தப்பட்ட பின்னர் கேப்டனும் அவனின் குழுவும் பாதையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை”, என்றவர் சொன்னார்.
சனிக்கிழமை தொடங்கி நேற்றுவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் டட்டாரான் மெர்டேகா வட்டாரத்தில் பேரணி நடத்தி 1எம்டிபி விவகாரத்துக்காகவும் ரிம2.6 பில்லியன் நன்கொடைக்காகவும் நஜிப் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.
பேரணி சட்டவிரோதமானது எனப் போலீசார் அறிவித்திருந்தாலும் அதைத் தடுக்கவில்லை.
நஜிப், தம் மெர்டேகா தினச் செய்தியில் பெர்சே 4 பேரணி ஆர்ப்பாட்டக்காரர்களைச் சாடினார். அவர்கள் “முதிர்ச்சியற்றவர்கள்” என்றும் நாட்டை நாசமாக்க முனையும் “துரோகிகள்” என்றும் அவர் வருணித்தார்.
தெரு ஆர்ப்பாட்டங்கள் பொது ஒழுங்குக்கு மிரட்டலாக விளங்குவதுடன் பல்வேறு அசெளகரியங்களையும் உண்டாக்குவதால் அவை நிராகரிக்கப்பட வேண்டியவை எனப் பிரதமர் கூறினார்.
“மக்களாட்சி நாட்டில் உணர்வுகளை வெளிப்படுத்த அது சரியான வழி அல்ல”, என்றாரவர்.
ஐயோ! நீங்கள் மாற்றிக்கொள்ளவே வேண்டாம்! இப்படியே போனால் தான் நீங்கள் போவது சரியான பாதை என்று எங்களாலும் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் நாட்டைத் தொடர்ந்து முன்னுக்கு இழுத்துக் கொண்டே போங்கள்!
உண்மையான, வெளிப்படையான மக்களாட்சி புத்துயிர் பிறக்கும் வரை மக்களின் போராட்டமும் ஓயப் போவதில்லை என்றே எண்ணுகிறேன் குற்றம் /தப்பு நடந்திருப்பில், அதனை திறமையுடன் நிவர்த்தி செய்வதே நல்லது. அதை விடுத்து, சட்டத்தையும் சர்வாதிக்காரத்தையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி நீண்டநாள் பயணம் செய்ய இயலாது!!! ஏற்பட்ட ஓட்டையோ தெள்ளத் தெளிவானது. மறைக்க/ மறுக்க முடியாது!! பயணக் கப்பல் மூழ்குவது வெகு தொலைவில் இல்லை!!!!
போகும் பாதையை மாற்றி கொண்டால் “சுங்கை புலோ சிறை” நிச்சயம் என்று அறிந்தவர் ஆயிற்றே.
பாய் விரித்து “நங்கூரத்தை” உயர்த்துவதில்தான் நீங்களும் உங்களுடைய தூக்கி தூக்கிகளும் வல்லவர்கள் என்பது உலகமே அறிந்த ஒன்றுதானே.
எப்படி போனாலும் சரி ,,ஆனால் ஒன்று மட்டும் உறுதி ,உன் இனத்தவன் வருவான் ,அமேரிக்கா அதிபர் கென்னடிக்கு நடந்தது மிக சுலபமாக நடுக்கும் ,அதுதான் உன் இறுதி கட்டும் ,சென்று வா மகனே சென்று வா அவ்வை உனக்காக சொர்க்கத்தில் காதிருப்பார்
இரண்டு நாள் ஆர்ப்பாட்டங்களில் இந்தியர்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்பதை காணும்போது நம் நாட்டில் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை என்பதை உணர முடியும் .அரசியல் எந்த பாதையில் சென்றாலும் நம் விதியை நாம்தான் ஒன்று சேர்ந்து மாற்ற வேண்டும் ,
அது ஒன்றே நாம் துயரங்களில் இருந்து மீள வழி
போகும் பாதை பொல்லாத பாதை புரிந்து வாழவாத் தெரியவில்லை?
அட நஜிசே ! தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் சிறு கடை அங்காடிகள் ஆகியோர் பத்து நாட்களில் சம்பாதிக்கும் வருமானத்தை “B4 மஞ்சள் பேரணியால்” இரண்டே நாளில் சம்பாதித்து விட்டோமே என்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போது, உனக்கு மட்டும் அசெளகரியங்களை ஏற்படுத்தி விட்டதா ?
போகும் பாதை பொல்லாத பாதை திருந்தி வாழவா தெரியவில்லை ,வேகமாக வளர்கின்ற காலத்தில் உயர்ந்து வரவா முடியவில்லை ……
உங்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.
மக்களை சுரண்டும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு என்று INDIAN தாத்தா சொன்னது ஞாபகம் வருது…. நீங்கள் உங்கள் வழியிலேயே போங்கள்…. அப்பொழுதுதான் UMNO புதைகுழிக்கு போகும்…