போலீசார், கடந்த வாரக் கடைசியில் நடந்த பேரணி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பெர்சே இயக்கக் குழு உறுப்பினர் எழுவரை அழைத்துள்ளனர்.
அவ் வெழுவரும் நாளை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
தாமும் இதர அறுவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
மரியா தவிர, விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மற்றவர்கள் வருமாறு: சராஜுன் ஹொடா அப்துல் ஹசான், மஸ்ஜலிசா ஹம்சா, பர்ஹானா அப்துல் ஹாலிம், பாட்யா நட்வா பிக்ரி, மந்திப் சிங், ஆடம் அட்லி அப்துல் ஹாலிம்.
அழிப்பானை கொடுத்து, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பு வழங்கி மேல்முறையீடு என்று போவதற்குள் இந்த தே.மு. அரசாங்கம் காணாமல் போய் விடும். அதனால் தாராளமாக விசாரணைக்குப் போங்கள். கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம்.
பெர்சே நான்குக்கு மலாய்க்காரர் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டு இப்போது கூப்பிடப் பட்டிருக்கும் பெரும்பாலோர் மலாயக்காரராகவே இருக்கின்றனரே!
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.என்ற பழமொழிக்கு ஆளாகிட்டானுங்க அம்னோகாரனுங்க.தூ…..!
சிகப்பு சட்டை ஆர்பாட்டகாரர்களுக்கு விசாரணை இல்லயோ. இது இரட்டை வேடம். பொறுத்திருங்கள் அடுத்த பொதுத்தேர்தல் மக்கள் தீர்ப்பு வழங்குவர்.