மக்கள் அனைவரும் மலேசியர்களாகத்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அம்னோ அமைச்சர் ரபிடா அசீஸ் வலியுறுத்தினார்.
குறிப்பாக மலாய்க்காரர்கள் தாங்கள் முதலில் மலாய்க்காரர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை நிறுத்த வேண்டும். தேச நிர்மாணிப்புக்கு அது அவசியம் என்றாரவர்.
“நான் மலாய் இனத்தைச் சேர்ந்தவள் என்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால், முதலில் நான் ஒரு மலேசியன். எதற்காக அப்படிச் சொல்கிறேன்? மலாய் நாடு என்ற ஒன்று இருக்கிறதா?”, என ஏர் ஏசியா X தலைவருமான ரபிடா வினவினார்.
“அரசியல் ரீதியில் சிலருக்கு அப்படிச் சொல்வது பிடிக்காது என்பதை நானறிவேன்”, என்றாரவர்.
சாபா, சரவாக்கைச் சேர்த்துக்கொண்டு மலேசியா அமைந்தபோது ‘தானா மலாயு’ என்று சொல்வது நின்று போனதை அவர் சுட்டிக்காட்டினார்.
“எனவே, முதலில் மலேசியராக இருப்போம். அதே வேளை வெற்றிபெற்ற மலாய்க்காரராக, சீனராக, இபான்காரராக இருப்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளுங்கள். அது உங்கள் பாரம்பரியம்”, என இரும்புப் பெண்மணி என்று போற்றப்படும் ரபிடா கூறினார்.
இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில், தேச நிர்மாணிப்புக்கு இளைஞர்களை உருவாக்குவதில் கல்வியின் பங்கு’ என்ற தலைப்பில் ரபிடா சொற்பொழிவாற்றினார்.
முடியாது! முடியாது!. இப்படியெல்லாம் சொல்லி அரசியல் சாசனத்தின் 153 பிரிவின் படி ‘முதல் சலுகைகளை’ எல்லாம் தகர்த்துவிட எண்ணுகின்றீர்கள்!. இதற்காகவே தங்கள் மீது தேச நிந்தனை சட்டத்தைப் பாய்ச்ச வேண்டும் என்று மலாய் ஆதிக்க ஆதரவாளர்கள் நாளைக்கே தங்கள் மீது போலிஸ் புகார் கொடுப்பார்கள். மலேசியர்களாக நாங்க ரெடி. நீங்க ரெடியா?
அம்மையார் சொல்வது சரி.
யார் என்ன சொன்னாலும் இந்த ஈன ஜென்மங்களுக்கு ஒன்றுமே ஏறாது.
அவர்களுக்கு தீனீப் போட்டு அந்த இன வெறியை தூண்டியதே உங்களைப் தலைவர்கள்தானே…? அமைச்சர் பொறுப்பில் இருந்த போது இந்த சிந்தனை எல்லாம் வரவில்லையே…?
நீங்கள் அமைச்சர் பதவியில் இருந்தபொழுது இந்த மாதிரி பேசியிருந்தால் நல்லது. இப்பொழுது பேசி என்ன பலனும் இல்லை.காலம் கடந்த அறிவிப்பு.சிகப்பு சட்டை பேரணியே அதற்கு சான்று.இனியும் அனைவரும் மலேசியர்கள் என்ற நிலை வர வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை.
‘ரபிடா அவர்களுக்கு வாழ்த்துக்கள்… ஆட்ச்சி ஆழ்பவர்களுக்கு இந்தணமாதிரி எண்ணங்கள் இருந்தாலே இன வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒற்மைக்கும் நாடுமுன்னேற்றத்திர்கும் வழி பிறக்கும்.ரபிடா அவர்களுக்கு மட்டும் ஞானம் பிறந்து என்ன ஆகபோது.
நல்லா யோசித்து பார் அம்மா. இந்த சிந்தனையை அம்னோ தானே இத்தனை வருடங்களாக வளர்த்து விட்டீர்கள். இப்பொழுது என்ன? ஞானம் போரந்துரிட்சோ? அது சரி இப்போதாவது புருஞ்சிசே.
ஒரு 10 பேரு இப்படி சொன்னால் கம்பதுக்கார மலைக்காரன் கண் விளிதுக்கொல்வான்
முதலில் மேல்நிலையில் உள்ளவர்கள் குறிப்பாக அமைச்சர்களாக உள்ளவர்கள் தங்களை, தங்களிடம் உள்ள அணைத்து தீய நோக்கங்களை அகற்றி ஒன்று பட்டாலே நாடு ஒன்றுபடும்,மக்கள் ஒன்றுபடுவார்கள்.
பதவி இல்லாத போது நல்லாவே கத்துறீங்க. பதவியில் உள்ளபோது இனத் தீவீரவாதத்தை தீனி போட்டு வளர்கிறீங்க.
நாடு சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டுகள் ஆகியும், மக்கள் இன்றளவும் தங்களை இனரீதியாக அடையாளம் காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் பிரிட்டிஷாரின் “பிரித்தாளும் கொள்கையை” கடுகளவும் குறையாமல் மக்களை இனரீதியாக பிரித்து அரசியல் நடத்தும் “UMNO”-தான் என்பது தங்களுக்கு தெரியாதா ? ஏன் இந்த திடீர் ஞானோதயம் ?
அது நடக்கவே நடக்காது– சிறப்பு உரிமை என்று சுதந்திரம் அடையும் போது இருந்தது — ஆனால் 1969 க்கு பிறகு அது பலவாறாக மாற்றப்பட்டு துரோகிகள் MIC – MCA கம்மனாட்டிகளின் ஆதரவினால் இன்று நம்மை எல்லாம் வந்தேறிகளாகி விட்டு நேற்று வந்த இந்தோக்கள் இன்று மண்ணின் மைந்தனாகி விட்டனர். இதற்க்கு யார் காரணம்? அம்னோ நாதாரிகள் தானே? சுதந்திரத்தின் போது நாமெல்லாம் சகோதரர்கள் இன்று …..? சுதந்திரம் எப்படி கிடைத்தது- வரலாறையே மாற்றி நம்மை எல்லாம் அதிலும் கல்வியில் இருக்கும் மாணவர்களை மடையர்களாக்கி ஆட்டம் போடுகின்றனர்.
காலம் கடந்த ஞானம்! இருப்பினும் தாங்கள் சார்ந்த இனத்தின் அரசியல் கட்சியின் கடந்த கால தவறுகளை திருத்தி கொள்ள விழைகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. சுதந்திரத்திற்கு முன் இருந்த “United Malays National Organisation” எனும் பெயரை, சுதந்திரத்திற்கு பின் “United Malaysians National Organisation” என்று பெயர் மாற்றம் செய்திருந்தாலோ, “Bumiputra” என்று மலாய்காரர்களுக்கு அடைமொழி கொடுக்கப்படாமலோ, மூன்று இன மொழிகளுடன் ஆங்கிலத்திற்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலோ, அல்லது இவ்வளவு காலமும் செய்த தவறை இன்னும் தொடராமலோ, இனி வரும் காலங்களில் எல்லாவற்றையும் திருத்தி அமைத்தாலோ, தங்களின் “மாற்றி யோசி” எனும் இந்த முற்போக்கான சிந்தனை நிச்சயம் மலேசியர்களை ஒன்றிணைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தின்றி வரவேற்கத்தக்கதே!
மானிட வாழ்க்கை,
காலதின் கட்டாயம் ,
தேவையின் அடிப்படையில்
ஊர்ந்து செல்லும் வாழ்க்கை .
சூழல்ஏற்ற ,சிந்தனை ,செயல் ..
தேவையின் நிறைவு ,
மானிட நேயத்தின் பிறப்பு.
கொன்றான்(கொலை) கோடி
உயிர் ஐரோப்பியன் .
ஆப்ரிகன் ,ஆசியன்
அடிமை .காரணம்
அவனின் தேவை ,
தேவையின் நிறைவு ,
மானிட நேயத்தின் பிறப்பு
ஐரோப்பியன் இதயத்தில்…
அன்பு ,காதல் ,இறக்கம் …
இதோ பிறந்தது.
மானிட நேயம் …
நாளை பிறக்கும்
மலேசியன் (மலாய் )
இதயத்தில் ……..
காலம் கனியும் ….
.