கோத்தா பாரு அம்னோ தொகுதி உறுப்பினர்கள் டிஏபி தலைவர்கள் லிம் கிட் சியாங் அவரின் மகன் லிம் குவான் எங் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர்.
கொடும்பாவிகளுக்கு மஞ்சள்நிற பெர்சே 4 டி-சட்டைகள் அணிவிக்கப்பட்டிருந்தன.
யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியில், அத்தொகுதித் தலைவர் பாத்மி சே சாலே கொடும்பாவிகளுக்கு எரியூட்டுவதைக் காண முடிந்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
போலிஸ் இவர்களை கைது செய்யாது . மாறாக இப்படிப்பட்டவர்களுக்கு தாலாட்டு பாடும். உள்துறை அமைச்சர் ஒன்றும் தெரியாதது மாதிரி புத்திமதி சொல்வார் .இதுதான் நம்ம நிலைமை .
இனிவரும் காலங்களில் தாங்கள் வெறுக்கும் தலைவர்களின் படங்களை காலால் மிதிக்காமல், கொடும்பாவிகலாக சித்தரித்து எரியுங்கள் என்ற கோத்தாபாரு அம்னோ தொகுதி உறுப்பினர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற துடிக்கும் மக்கள், கொடும்பாவிகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைமேல் அமரவைத்து வீதி ஊர்வலம் என எரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஆரம்பிச்சுட்டானுங்க அவங்க அயோக்கியத்தனத்தை.
பிரதமர் நடவடிக்கை எடுக்காத வரைக்கும் இவர்கள் இப்படிதான் செய்வார்கள்.ஜோஹோர் மாநிலம் போல சுல்தான் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் இவர்கள் கோட்டம் அடங்கும்.
உள்துறை அமைச்சரே உன் பதில் என்ன? இங்குதான் இருக்கிறாயா அல்லது பூர்விக நாடிற்கு சென்றுவிட்டாயா? அல்லது பாகன் டாத்தொவில் ஒளிந்து கொண்டா இருகிறாய் பதில் இல்லே…