நாளை நடக்கும் சிகப்புச் சட்டைப் பேரணி மலாய்க்காரர்களைப் பாதுகாக்க நடத்தப்படுவதாகவும் பெர்சே 4 ஒரு இனவாதப் பேரணி என்றும் கூறப்பபடுவதை அபத்தம் என்று கூறி ஒதுக்கித் தள்ளினார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“பெர்சே 4 இனவாதம் சார்ந்ததல்ல, எல்லா இனத்தவரும் அங்கு இருந்தனர்.
“அவர்கள் (சிகப்புச் சட்டைகள்) பெர்சேயை இனவாதம் சார்ந்தது என்று காண்பிக்க விரும்புகிறார்கள். அப்போதுதானே அவர்களால் மலாய்க்காரர்களைப் பாதுகாக்க முடியும்.
“(ஆனால்) அவர்கள் மலாய்க்காரர்களைப் பாதுகாக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை”,என புத்ரா ஜெயாவில் மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேரணியில் தொல்லைகள் நேருமா என்று வினவியதற்கு, “எதுவும் நேரக் கூடாது என்பதே என் விருப்பம்”, என்றார்.
ஊழல் மிகுந்த அமீனோ கட்சி இருந்தால்தான் ஜோ லோ போன்ற சீனர்கள் பிழைக்க முடியும். அன்று எப்படி இவர் ஆட்சியில் இனவாதத்துடன் ஆட்சி செய்தாரோ, அதே போல் இப்பவும் அமீனோ கட்சி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். உம் கண் முன்னாலையே ஆசை அப்பளம் தோசையாயிடுச்சுப் பார்த்தியா? இனி நீ அமீனோ கட்சியை மறந்து ம.இ.க. – வில் உறுப்பினாராகி விடு. காலியாக இருக்கின்ற தலைவர் பதவியாவது கிடைக்கும்.
நல்ல நடிகர் இவர். ஒரு கணம் உங்கள் ஆட்சியை நினைத்து பாருங்கள்.இன்று நாடு இந்த அளவுக்கு மோசமான நிலை உருவானருக்கு நீங்களும் ஒரு காரணமே.திறமையானவர்களை ஒதுக்கி அரைவேக்காடுகலை பதவியில் அமர்த்தி ஆனந்தம் அடைந்து கொண்டாய்.அதன் விளைவுதான் இன்றைய நாட்டின் நடப்பு.