அரசாங்கம் கோலாலும்பூர், சிலாங்கூர், புத்ரா ஜெயா, மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளை மூடும்படி உத்தரவிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் அந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக துணை அமைச்சர் பி.கமலநாதன் நேற்றிரவு டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
புகை மூட்டம் மோசமடைந்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது.
நேற்றிரவு கோலசிலாங்கூரில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு (ஏபிஐ) 207 என அபாய எல்லையைத் தாண்டிருந்தது. சிலாங்கூரின் மற்ற பகுதிகளில் ஏபிஐ 170 ஆக இருந்தது.
நெகிரி செம்பிலான் நீலாயில் 200. மலாக்காவில் 193; கோலாலும்பூரில் 192; புத்ரா ஜெயாவில் 182.